தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ராசிபுரம், ஜூலை 9: ராசிபுரத்தில் தேமுதிக பூத் கமிட்டி மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், தொழிற்சங்க பேரவை தலைவர் இளங்கோவன் கலந்துகொண்டு, 2026 தேர்தல் களம் பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணை செயலாளர்...
குடிநீர் திட்ட பணி வெள்ளோட்டம்
ராசிபுரம், ஜூலை 9: ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சி பகுதியில், புதிய குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்ட பணிகள் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி நிர்வாகத்தினர் வார்டு வாரியாக குடிநீர் வழங்கி வருகின்றனர். இருந்தும் போதுமானதாக இல்லை என்பதனை அறிந்து, புதிய குடிநீர் திட்ட பணியும் பட்டணம்...
பஸ்சின் டயரில் சிக்கி முதியவர் பலி
நாமக்கல், ஜூலை 8: கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்டெனீசியஸ் (60). இவர் நேற்று அரசு பஸ்சில் திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், பஸ்சில் இருந்து இறங்கி ஸ்டெனீசியஸ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில்...
மது பதுக்கி விற்ற முதியவர் கைது
பரமத்திவேலூர், ஜூலை 8: பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியில், ஒரு ஓட்டலுக்கு அருகில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், அண்ணாநகர் பகுதிக்கு விரைந்து சென்று...
குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை
திருச்செங்கோடு, ஜூலை 8: திருச்செங்கோடு அருகே சக்திநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டங்காடு செல்லும் சாலையோரத்தில், மினி சின்டெக்ஸ் டேங்க், கடந்த 2022-23ம் ஆண்டு ஊராட்சி சார்பில் 15வது நிதி குழு மானியம் மூலம், 8 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு திட்டத்தின் மூலம், ரூ.1.34லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல்...
அரளி பூக்களின் வரத்து அதிகரிப்பு
சேந்தமங்கலம், ஜூலை 7: சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம்புதூர், வெண்டாங்கி, வாழவந்தி கோப்பை, பள்ளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் அரளி பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யும் பூக்களை விவசாயிகள் சேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால் பூக்கள் பெரிதாகவும், வாசனை...
ரூ.64.23லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடு, ஜூலை 7: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் டெண்டர் மூலம் நடந்தது. மஞ்சள் மூட்டைகளை ஜேடர்பாளையம் சோழசிராமணி, இறையமங்கலம், கொடுமுடி பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனி வாகனங்களில் கொண்டு வந்தனர். இதில் விரலி மஞ்சள்...
75அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது
நாமக்கல், ஜூலை 7: நாமக்கல் மாவட்டத்தில் கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற, 75அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவ, மாணவியரின் கற்றல் திறனை அதிகரிக்க, தொடக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் சிறந்த பள்ளி...
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்
சேந்தமங்கலம், ஜூலை 6: சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை மற்றும் சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா, பொம்மசமுத்திரம் ஊராட்சியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா முன்னிலை வகித்தார். விழாவில் வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் கலந்துகொண்டு, ஊட்டச்சத்து...