சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைப்பு
திருச்செங்கோடு, அக். 14: வாகன போக்குவரத்திற்கு அவசியமான நெடுஞ்சாலைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தாலும், வாகன போக்குவரத்து மற்றும் கால நிலைகளுக்கு ஏற்ப தார் சாலையானது சேதாரமடைந்து பள்ளங்கள் ஏற்படும். குறிப்பாக மழையால் பள்ளங்கள், குழிகள் உருவாகும். அவ்வாறு உருவாகும் பள்ளங்களை கண்டறிந்து பருவமழை காலத்திற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சரி செய்வது வழக்கம். பள்ளிபாளையம் கோட்ட...
குடியிருப்புக்கு அருகில் மயானம் அமைக்க எதிர்ப்பு
நாமக்கல், அக்.14: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஈஸ்வரமூர்த்தி பாளையம் வடக்குகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அளித்த கோரிக்கை புகார் மனு விபரம்: வடக்குகாடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பை சுற்றி விவசாய நிலம் மற்றும் தார்சாலை உள்ளது. குடியிருக்கும் பகுதியில் மற்றொரு சமுதாயத்திற்கு...
மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா
ராசிபுரம், அக்.13: ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் கலாம் பசுமை இயக்கம் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழாவினை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு கலாம் பசுமை இயக்கத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசினார். பொருளாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட...
சேகுவேரா நினைவு தினம் அனுசரிப்பு
திருச்செங்கோடு, அக்.13: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர குழு சார்பில், சேகுவேரா 58ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுகுமார், வெங்கடேஷ் ஆகியோர், சேகுவாரா வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். மாவட்ட குழு...
சன்மார்க்க விழாவில் நாட்டிய நிகழ்ச்சி
திருச்செங்கோடு, அக்.13: திருச்செங்கோட்டில் நடைபெற்ற சன்மார்க்க சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் திருவள்ளுவர் விழா, பாரதியார் விழா, வள்ளலார் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குனர் சிங்காரவேல் தலைமை வகித்தார். திருச்செங்கோடு பாவடி நாட்டாண்மைக்காரர்கள் மனோகரன், ரவிக்குமார்,...
பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
நாமக்கல், அக்.12: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் நேற்று பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன்...
வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி
திருச்செங்கோடு, அக். 12: திருச்செங்கோடு ஒன்றியம், புதுப்பாளையம் விஸ்வம் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள்(43). இவரது கணவர் சீனிவாசன்(47), எலக்ட்ரீசியன். சீனிவாசன் நேற்று தனது டூவீலரில், திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி நோக்கி சென்றுள்ளார். பால்மடை பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியின் வேன் டூவீலரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன்...
ரூ.44 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் துவக்கம்
பள்ளிபாளையம், அக்.12: குப்பாண்டபாளையம் ஊராட்சி மொளசி முதல், காந்தி நகர் வரை ரூ.44 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. பள்ளிபாளையம் ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சியில் மொளசி முதல் காந்தி நகர் வரையிலான 800 மீட்டர் தூரத்திற்கு, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அட்மா திட்ட தலைவர்...
துணிக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
பள்ளிபாளையம், அக்.10: பள்ளிபாளையத்தில், துணிக்கடை பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காகித ஆலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ரதிதேவி, அருகில் உள்ள தாஜ்நகரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று...