குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை
பரமத்திவேலூர், டிச. 5: பரமத்திவேலூரை அடுத்த வில்லிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48), விவசாயி. இவரது மனைவி நர்மதா. இவர்களுக்கு 6வயதில் ஒரு மகன் உள்ளான். சதீஷ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்த சதீஷ்குமார் விஷம்...
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம், டிச. 4: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று கார்த்திகை நட்சத்திரம் மற்றும் தீபத்திருநாளை முன்னிட்டு மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு...
மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்
சேந்தமங்கலம், டிச.4: புதுச்சத்திரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தினவிழா விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், ‘பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின்...
அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
திருச்செங்கோடு, டிச.4: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை, வணிகவியல் துறை, தொழில் முனைவோர் புத்தாக்க பிரிவு மற்றும் நிறுவன புத்தாக்க சபை ஆகியவற்றின் சார்பில், தொழில்முனைவோர் பணிமனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாமக்கல் கலை இயக்குனர் பழனிவேல் கலந்து கொண்டு, கலைத்துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்குவது குறித்து மாணவ,...
450 மூட்டை பருத்தி ரூ.13 லட்சத்திற்கு ஏலம்
நாமக்கல், டிச. 3: நாமக்கல்- திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மேலாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள், மொத்தம் 450 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். திண்டுக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள்...
50 மூட்டை பருத்தி ரூ.90 ஆயிரத்திற்கு ஏலம்
திருச்செங்கோடு, டிச. 3: திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் பட்லூர், செல்லிபாளையம், உஞ்சனை, குமாரபாளையம், களியனூர், சங்ககிரி, பரமத்திவேலூர், இறையமங்கலம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் 50 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ரூ.6479 முதல் ரூ.7401 வரை ஏலம் போனது. இதில் மொத்தம்...
மரத்தில் டூவீலர் மோதி டிரைவர் பலி
சேந்தமங்கலம், டிச. 3: கரூர் மாவட்டம், சோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலையன் மகன் தீனதயாளன்(30). இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தீனதயாளன் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த பழையபாளையம் கிராமத்தில் பொக்லைன் மூலம் மண்ணை சமப்படுத்தும் வேலை முடித்து விட்டு, நேற்று அதிகாலை தனது...
பூஜையுடன் தொடங்கிய பருத்தி ஏலம்
ராசிபுரம், டிச.2: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகளவு பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பருத்தியை விவசாயிகள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய, ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கவுண்டம்பாளையம் கிளையில் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. பருத்தி சீசன் முடிந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் பருத்தி ஏலம் முடிவுக்கு...
சத்துணவுக்கூடம் திறப்பு விழா
மல்லசமுத்திரம், டிச.2: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.7.56 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்ட புதிய சத்துணவுக்கூடம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல் புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். விழாவில்...