100 நாள் வேலை திட்டத்தில் உறவினர்களுக்கு பணி ஒதுக்கீடு

சேந்தமங்கலம், டிச.2: எருமப்பட்டி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண் பயனாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டும் மக்கள் நலப்பணியாளர், உறவினர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் கோடாங்கிப்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை...

தேசிய மாணவர் படை தினம் கொண்டாட்டம்

By Arun Kumar
30 Nov 2025

  பள்ளிபாளையம், டிச.1: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படை தினம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை வகித்து தேசிய மாணவர் படையின் தோற்றம், தொன்மை குறித்து பேசினார். என்சிசி அலுவலர் கார்த்தி வரவேற்றார். மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்ஐ குணசேகர் தேசிய மாணவர் படையில் சேர்ந்துள்ள...

தொடர் மழையால் நெல் வயலில் தேங்கிய நீர்

By Arun Kumar
30 Nov 2025

  சேந்தமங்கலம், டிச.1: எருமப்பட்டி வட்டார பகுதியில் தொடர் மழையின் காரணமாக வயலில் தேங்கியுள்ள மழை நீரால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எருமப்பட்டி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பவித்திரம், பவித்திரம்புதூர், நவலடிபட்டி, முட்டாஞ்செட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி, கோம்பை, முத்துகாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்று...

குண்டுமல்லி விலை சரிவு

By Arun Kumar
30 Nov 2025

  பரமத்திவேலூர், டிச.1: பரமத்திவேலூர் மலர் சந்தையில் நேற்று முன்தினம் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையான குண்டு மல்லி நேற்று விலை சரிந்து ரூ.2,600க்கு ஏலம் போனது. பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆனங்கூர், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகர், கோப்பணம்பாளையம், கபிலர்மலை, குஞ்சாம்பாளையம், நடந்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி, செங்கப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்...

டூவீலர் மோதி முதியவர் பலி

By Karthik Yash
28 Nov 2025

குமாரபாளையம், நவ.29: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி மொண்டிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (75). இவரது மனைவி சேவத்தாள். மாரியப்பன் பவானியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சுமைப்பணி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 25ம்தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை. வேலை அதிகமுள்ள நாட்களில்...

மல்லசமுத்திரத்தில் கொப்பரை ஏலம்

By Karthik Yash
28 Nov 2025

மல்லசமுத்திரம், நவ. 29: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த ஏலத்துக்கு, விவசாயிகள் 5 மூட்டை கொப்பரையை கொண்டுவந்திருந்தனர். ஏலத்தில் முதல் தரம் கொப்பரை கிலோ ரூ.171.45 முதல் ரூ.196.00 வரையிலும், இரண்டாம் தரம் கொப்பரை கிலோ ரூ.120.50 முதல்...

இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
28 Nov 2025

சேந்தமங்கலம், நவ.29: கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 50 ஆண்டுகள் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை, தொழிலாளர்களுக்கு எதிராக அவர்களை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள 4...

டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

By Karthik Yash
27 Nov 2025

நாமக்கல், நவ.28: நாமக்கல் மாநகராட்சி பட்டறைமேடு கங்கா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இரும்பை துண்டிக்கும் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து அதிக சத்தம் வருவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அந்த தொழிற்சாலைக்கு மின்சாரம் பெற அதிக மின் அழுத்தம் செல்லும் வகையில், டிரான்ஸ்பார்மர் அமைக்க...

தி.கோடு ஜி.ஹெச்.,ல் மருத்துவ பயனாளிகளுக்கு பால், பழம்

By Karthik Yash
27 Nov 2025

திருச்செங்கோடு, நவ.28: தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மருத்துவ பயனாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அண்ணா...

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

By Karthik Yash
27 Nov 2025

பரமத்திவேலூர், நவ.28: பரமத்திவேலூரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலக வளாகத்தில், பேரூர் செயலாளர் முருகன் முன்னிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ்பிரபாகரன், திமுக கொடியை ஏற்றி வைத்தார். பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து, பேரணி...