ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவக்கம்
திருச்செங்கோடு, நவ.27: திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ரூ.3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. இங்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தய ட்ராக், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம், கபடி மைதானம், லாங் ஜம்ப், கோ-கோ போட்டிக்கான இடம், பார்வையாளர் அமர்ந்து பார்வையிட...
எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி விலை உயர்வு
சேந்தமங்கலம், நவ.27: திருமண முகூர்த்த நாள் எதிரொலியாக எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1200 விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாபட்டி, பழையபாளையம், கோம்பை, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக...
நாமக்கல்லில் கொட்டி தீர்த்த பலத்த மழை
நாமக்கல், நவ.26: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மழை சற்று தணிந்தது. நேற்று...
பொதுமக்களை கத்தியால் குத்திய 3 பேர் குண்டாசில் கைது கலெக்டர் உத்தரவு
ராசிபுரம், நவ. 26: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - பட்டணம் சாலை அருகே, கடந்த மாதம் 26ம்தேதி மதுபான கடை மற்றும் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் பலரை, 3 இளைஞர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டணம் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பிரதீப்(21), தனியார் பொறியியல் கல்லூரியில்...
டூவீலர் மோதியதில் தொழிலாளி சாவு
திருச்செங்கோடு, நவ. 26: திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (55). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அந்த வழியாக வந்த டூவீலர், இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு,...
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
பரமத்திவேலூர், நவ.25:பரமத்திவேலூரை அடுத்துள்ள கோலாரம் அருகே, கரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). இவரது மகள் பவதாரணி (18), பரமத்திவேலூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது தாய் சரோஜா மொடக்குறிச்சியில் கட்டிட சித்தாள் வேலைக்கு...
அர்த்தநாரீஸ்வரர் தேர் கட்டுமான பணி தீவிரம்
திருச்செங்கோடு, நவ.25: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இந்த சாமிகள் திருமலையில் இருந்து நகருக்கு இறங்கி வந்து தேரின் மீது அமர்ந்து வரும் தேர்த்திருவிழா, திருச்செங்கோட்டில் வைகாசி விசாகப் பெருவிழாவாக கோலாகாலமாக கொண்டாடப்படும். அர்த்தநாரீஸ்வரர் தேர் சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, மைசூர்...
டாஸ்மாக் கடையை இடமாற்ற வலியுறுத்தல்
நாமக்கல், நவ.25:நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,எருமப்பட்டி, பொன்னேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கிராமத்தில் 700 குடும்பங்களும், காளிசெட்டிப்பட்டிபுதூரில் 300 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு எருமப்பட்டி வந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும்...
ஒன்றிய அளவிலான வானவில் மன்ற போட்டி
நாமக்கல், நவ.22: நாமக்கல்லில் ஒன்றிய அளவிலான வானவில் மன்ற போட்டி நேற்று நடைபெற்றது. இதில், அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் 50 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசி ராணி தொடங்கி வைத்தார். உலகளாவிய பிரச்சனைகளுக்கு உள்ளூர் அளவில் தீர்வு...