மாமியாரை வெட்டிய மருமகன் கைது
சேந்தமங்கலம், செப்.22: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி காந்தி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி(40). விவசாயியான இவரது மனைவி ராணி(37). இவர்களது மகள் ஜோதியை திருமலைப்பட்டி வரதராசு மகன் சின்ராசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜோதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில், சின்ராசு தனது மனைவியை குடும்பம்...
மாவட்டத்தில் பரவலாக மழை
நாமகிரிப்பேட்டை, செப்.19: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் வேளையில் வெயில் அடிப்பதும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளது. வெண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 6 மணிக்கு மிதமான மழை பெய்யத்...
சேந்தமங்கலத்தில் குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம்
சேந்தமங்கலம், செப்.19: சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் உள்ள கிருஷ்ணர், ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி அன்று முத்துப்பல்லக்கில் புதன்சந்தை அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. கோகுலாஷ்டமி அன்று சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கிருஷ்ணர்...
மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் திமுக முப்பெரும் விழாவில் 500 பேர் பங்கேற்பு
பரமத்திவேலூர், செப்.19: கரூர் கோடங்கிப்பட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில், திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆணைப்படியும், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி அறிவுறுத்தலின் படியும் நாமக்கல்...
மல்லசமுத்திரத்தில் ரூ.5.38லட்சத்திற்கு பருத்தி விற்பனை
மல்லசமுத்திரம், செப்.18: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 249 மூட்டை பருத்தியை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டால் ரூ.6499 முதல் ரூ.8211 வரையிலும், பிடி.ரகம் ரூ.6109 முதல் ரூ.8011 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4399 முதல் ரூ.6599...
நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2600 டன் ரேஷன் அரிசி வரத்து
நாமக்கல், செப். 18: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து, 2600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் நேற்று வந்தது. ரேஷன் அரிசி மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு, நாமக்கல் அருகேயுள்ள என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
பெரியார் பிறந்தநாள் விழா
குமாரபாளையம், செப். 18: தந்தை பெரியாரின் 147வது பிறந்த தினவிழா, குமாரபாளையத்தில் நடந்தது. நகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகரணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து, பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரணை துணை அமைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்து...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 900 பேர் மனு
நாமகிரிப்பேட்டை, செப்.17: வெண்ணந்தூர் அருகே, தேங்கல்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில், மகளிர் உரிமைத் தொகை வேண்டி 900க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர். மேலும், முதியோர் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா விண்ணப்பித்தனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட...
புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சேந்தமங்கலம், செப்.17: புதுச்சத்திரம் காவல்நிலையம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுச்சத்திரம் காவல் நிலையம் சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அப்பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள்...