தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடு குறித்து இயக்குநர் நேரில் ஆய்வு
நாமக்கல், ஜூலை 19: தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம் அருகேயுள்ள நவனியில் விவசாயி ரவி வயலில், மானிய திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன வயலை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கீழ் சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயி துரைசாமி...
சோளக்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சேந்தமங்கலம், ஜூலை 18: கொல்லிமலை சோளக்காடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி...
நவீன வேளாண்மை இயந்திரங்கள் கண்காட்சி
நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும்...
பயிர் சாகுபடிக்கு 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைப்பு
நாமக்கல், ஜூலை 18: நாமக்கல் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. போலி உரங்களை விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காவிரி பாசனம், வாய்க்கால் பாசனம், ஏரி பாசனம் மூலம் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின்...
12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
நாமகிரிப்பேட்டை, ஜூலை 17: நாமகிரிப்பேட்டை அருகே பிலிப்பாகுட்டை பகுதியில் செயல்படும் டீக்கடை, பெட்டிக்கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராஜா,...
அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகளை மூட நடவடிக்கை
நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் ராம்குமார், ரவீந்திரன் ஆகியோர் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவன பகுதிகளில், ஏராளமான அனுமதி பெறாத விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தனித்தனியாக மற்றும்...
மாவட்டத்தில் 9114 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி தொடக்கம்
நாமக்கல், ஜூலை 17: நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 9114 பேருக்கு எழுத்தறிவு பயிற்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கல்லாதவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர்...
புதுப்பெண் மாயம் ; போலீசில் புகார்
குமாரபாளையம், ஜூலை 16: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் குமாரபாளையம் குளத்துக்காட்டில் தங்கி மில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தனது மாமா மகள் மோனிசா(18) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இருவரும், குமாரபாளையத்தில் தங்கியிருந்தனர். கடந்த 12ம் தேதி மதியம், வேலைக்கு...
இளம்பெண்ணுக்கு போலி பணி நியமன உத்தரவு தயாரித்து கொடுத்தது யார்?
நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் மாவட்டம், பெரியமணலி அருகே குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார் (29). கோவையில் ஒரு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை செய்து வரும் இவருக்கும், நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினிக்கும், கடந்த ஆண்டு ஜூனில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தன்வர்த்தினி கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்டிஓவாக (வருவாய் கோட்டாட்சியர்)...