மூட்டையில் வைத்த ரூ.28 ஆயிரம் செல்போன் திரும்ப ஒப்படைப்பு
பள்ளிபாளையம், ஜூலை 15: குடிபோதையில் தெருவில் மயங்கிய தொழிலாளியின் பையில் இருந்த ரூ.28 ஆயிரம் பணம், 2 செல்போன்கள், போதை தெளிந்த பின்னர் போலீசார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அரச்சலூரை சேர்ந்தவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சண்முகசுந்தரம்(40). கடந்த 2 மாதங்களாக, பள்ளிபாளையத்தில் தங்கி கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று...
சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை வாடகை வாகனமாக இயக்குவது, கடந்த...
சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில அரசு பள்ளியில் படித்த 34 மாணவ, மாணவிகள் தேர்வு
நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த 34 மாணவ, மாணவிகள், இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்வி கட்டணமாக தமிழக அரசு ரூ.2 கோடி செலுத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை...
திமுக இளைஞரணி ரூ.25ஆயிரம் நிதி உதவி
திருச்செங்கோடு, ஜூலை 14: திருச்செங்கோடு தாலூகா பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கவினிதா (23). கூலி தொழிலாளி. இவரது மகள் ஜோஸ்னா (3). சில வாரங்களுக்கு முன்பு குழந்தை தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, தெருநாய் கடித்ததில் இடது காது அறுந்து விட்டது. காதை ஒட்டவைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இதற்காக இளைஞர் அணி...
56 டன் காய்கறி பழங்கள் விற்பனை
நாமக்கல், ஜூலை 14: நாமக்கல் உழவர் சந்தையில் 56டன் காய்கறிகள், பழங்கள் ரூ.25.16 லட்சம் மதிப்பில் விற்பனையானது.நாமக்கல் கோட்டை மெயின்ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தரமான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி...
கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேந்தமங்கலம், ஜூலை 14: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இரவில்...
ராசிபுரத்தில் வெப்பம் தணித்த திடீர் மழை
ராசிபுரம், ஜூலை 11: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6மணியளவில் திடீரென பெய்த மழையால், நகர பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர்...
புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
மல்லசமுத்திரம், ஜூலை 11: மல்லசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை துணை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மல்லசமுத்திரத்தில் பத்திரப்பதிவு துறையின் சார்பில், ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை நேற்று, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். `தொடர்ந்து...
அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜூலை 11: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முன்பு, பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி, நேற்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய...