முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு
குமாரபாளையம், ஜூலை 1: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான புத்தொளி பயிற்சி வகுப்புகள் துவக்கியது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில், பாடம் தொடர்பான அரசின் கல்வி மேம்பாட்டு திட்டம், உதவித்தொகை, வேலை வாய்ப்புக்கான தகுதிகள், வாழ்க்கை மேம்பாடுஉள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் துவக்க விழா,...
ஓய்வு பெற்ற எஸ்ஐக்கு பணிநிறைவு பாராட்டு
மல்லசமுத்திரம், ஜூலை 1: மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் முருகேசன்(60). இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். முன்னதாக நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து காவல் நிலையத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா முன்னிலை வகித்தார்....
திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
சேந்தமங்கலம், ஜூலை 1: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டியில் நடந்த திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் பொன்னுசாமி எம்எல்ஏ பேசினார். சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கப் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் பேளுக்குறிச்சி ஊராட்சி, காளப்பநாயக்கன்பட்டி...
ஜி.ஹெச்., முன்பு கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
மல்லசமுத்திரம், ஜூன் 27: ராமாபுரம் அரசு மருத்துவமனை அருகில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாபுரத்தில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின்...
வேகத்தடையில் ரிப்ளக்டர் பொருத்த நடவடிக்கை
திருச்செங்கோடு, ஜூன் 27: எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் சாலையில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் சரக்கு வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 6...
ராசிபுரத்தில் சாரல் மழை
ராசிபுரம், ஜூன் 27: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராசிபுரம், ஆண்டகளுர் கேட், குருசாமிபாளையம், அத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் அடிப்பதும், திடீரென கருமேகங்கள் திரண்டு வருவதுமாக இருந்தது. மதியம் திடீரென்று சாரல் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரத்திலேயே...
தார்சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
நாமக்கல், ஜூன் 26: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி பின்புறம், புதிய தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை, ராஜேஸ்குமார் எம்பி துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி 34வது வார்டு, கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி பின்புறம், ரூ.70 லட்சத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் புதிய தார்சாலை அமைக்கும்...
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தெம்பளம் தார்சாலை
சேந்தமங்கலம், ஜூன் 26: கொல்லிமலை மேல்கலிங்கத்தில் இருந்து, தெம்பளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரியூர் நாடு...
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை
மல்லசமுத்திரம், ஜூன் 26: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மூலவர் கந்த சுவாமிக்கு பல்வேறு மூலிகைகள் மற்றும் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர், உற்சவர் மற்றும்...