திருச்செங்கோடு அருகே 4 நாளாக திறக்காத ரேஷன் கடை பொதுமக்கள் அவதி
திருச்செங்கோடு, ஆக.27: திருச்செங்கோடு அருகே உஞ்சனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில், சக்திநாயக்கன்பாளையம் ரேஷன் கடை குமாரமங்கலம் முனியப்பன் கோயில் அருகில் செயல்பட்டு வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. கடந்த நான்கு நாட்களாக பணியாளர் விடுமுறை எடுத்ததால் கடை திறக்கப்படாமல் பொதுமக்கள் பொருட்கள் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது....
நாமக்கல்லில் 29ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் ஆக.27: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம்தேதி நடக்கிறது. நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிய உள்ளார். இக்கூட்டத்தில்...
மாஜி எஸ்ஐயை கடித்து குதறிய தெருநாய்
ராசிபுரம், ஆக.27:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பில் ராஜ்(60). இவர் எஸ்ஐயாக பணியாற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அன்பில் ராஜ் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று வழக்கம் போல், ராசிபுரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து முத்துகாளிப்பட்டி வரை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கோரைக்காடு அருகே ெசன்ற போது,...
பண்ணைக்குள் புகுந்து 20 நாட்டுக்கோழிகள் திருட்டு
சேந்தமங்கலம், ஆக.23: எருமப்பட்டி அருகே பண்ணையில் இருந்த 20 நாட்டுக்கோழிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்தவர் தியாகராஜன்(48), லாரி டிரைவர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை...
செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் ரத்ததான முகாம்
திருச்செங்கோடு, ஆக.23: திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் மற்றும் சார்க் அறக்கட்டளை, சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தானம் முகாம் நேற்று செங்குந்தர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளருமான பாலதண்டபாணி தலைமை...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நல உதவிகள்
நாமக்கல், ஆக.23: நாமக்கல் மாநகராட்சி 37வது வார்டு பெரியப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், உங்aகளுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், முகாமில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதித்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட...
புகையிலை விற்ற 5 கடைகளுக்கு சீல்
பள்ளிபாளையம், ஆக.22: பள்ளிபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்று வந்த 5 கடைகளை, சீல் வைத்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் ரங்கனூர், மேட்டுக்கடை, காடச்சநல்லூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி, டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன் நேற்று சோதனையிட்டார். இதில் தடை செய்யப்பட்ட பான்...
கீழே தவறி விழுந்து தொழிலாளி பலி
நாமக்கல், ஆக.22: மோகனூர் அருகேயுள்ள கே.புதுப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மங்காடு பிந்தானி (23) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று தனது மனைவியுடன் நாமக்கல் சென்று விட்டு அணியாபுரம் வந்தனர். அங்கிருந்து தோளூரில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக, இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளனர். தோளூர் அருகில் ஆட்டோவில் இருந்து இறங்கியபோது, கீழே...
சாலையை சீரமைக்க பொதுமக்கள் மனு
சேந்தமங்கலம், ஆக.22: எருமப்பட்டி அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எருமப்பட்டி ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வடுகப்பட்டி மாரியம்மன் கோயில் சாலையில் இருந்து, காந்திநகர் இணைப்பு சாலை கோடாங்கிப்பட்டி மற்றும் எருமப்பட்டி வரை...