நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 11: தடுப்பூசி பணியில் எம்எல்எச்பி பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புனிதா முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சத்தியா...
தலைஞாயிறில் சிறப்பு மருத்துவமுகாம்
வேதாரண்யம், ஜூலை 10: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் வரும் முன் கண்டறிந்து நோய் வராமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சீயோன் ஆலய நிர்வாகி சந்திரமோகன் துவக்கி வைத்தார்இம் முகாமில் இதய அடைப்பு,...
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கொள்ளிடம், ஜூலை 10: கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் கரையோரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து முதற்கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் கடந்த 30 ஆம் தேதி வெளியேற்றப்பட்டு அது கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கொள்ளிடம்...
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்பு மனு
சீர்காழி, ஜூலை 10: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் சங்கத்தின் நகர செயலாளர் . முருகன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவை பேரூராட்சி செயல் அலுவலர் அருள்மொழியிடம் வழங்கினார். இதில் சங்கத்தின் ஒன்றிய...
காமராஜர் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி
காரைக்கால், ஜூலை 9: வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார். புதுவை கலைமாமணிகள் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக காரைக்கால் மாவட்டம் வடமறைக்காடு, காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் அமைச்சர் திருமுருகன் கலந்து...
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
சீர்காழி, ஜூலை 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் புகழ் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாதித்து வருகிறார். இக்கோயிலில் அமைந்துள்ள சந்திரன், சூரியன், அக்னி ஆகிய முக்குளங்களில் புனித நீராடி சுவாமியை தரிசனம்...
சீர்காழியில் 5 மணி நேரம் நின்ற ரயில்
சீர்காழி, ஜூலை 9: காரைக்காலிலிருந்து காலை 4. 50 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்திற்கு சுமார் 7.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 3 சிறுவர்கள் உயிரிழந்ததால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சீர்காழி ரயில் நிலையத்தில்...
சீர்காழியில் அந்தியோதியா ரயில் நின்று செல்ல கோரிக்கை
சீர்காழி, ஜூலை 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அன்பழகன் ஆய்வு செய்தார். மேலும், ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும், குடிநீர்...
காரைக்கால் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவிதொகை
காரைக்கால், ஜூலை 8: காரைக்காலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் உதவித்தொகை அட்டைகளை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் வழங்கப்படும் முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் என தெற்கு தொகுதியை சார்ந்த 67 பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது....