மயிலாடுதுறை அருகே வழுவூரில் கலைஞர் முழு உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
குத்தாலம்,ஜுலை 17: தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி சாலை வழியாக ரோடு சோவில் வந்து கொண்டிருக்கும்போது தருமபுரம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கை கொடுத்து மற்றும் செல்பி எடுத்துக் கொண்டார்....
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புனித பயணம் மேற்ெகாள்ள விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம், ஜூலை17: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள...
மயிலாடுதுறை அருகே வழுவூர் வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு
குத்தாலம்,ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் கிழக்கு ஒன்றியம் வழுவூர்(பண்டாரவடை முகப்பில்) புதியதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சுமார் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை காலை 9.00 மணி அளவில் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில்...
தமிழ முதலமைச்சர் இன்று மயிலாடுதுறை வருகை உற்சாக வரவேற்பளிக்க திரண்டு வாருங்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன் அழைப்பு
மயிலாடுதுறை, ஜூலை 16: மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க பெருந்திரளாக கலந்துகொள்ள கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மயிலாடுதுறையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மன்னம்பந்தல்...
மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்தார்
சீர்காழி, மயிலாடுதுறை, ஜூலை 16: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சீர்காழி பகுதிக்கு காரில் வந்தார். முதல்வரின் வருகையையொட்டி அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்....
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.31 லட்சம் நலத்திட்ட உதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார்
நாகப்பட்டினம், ஜூலை15: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு...
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சட்டவிரோத நடைமுறையை எதிர்த்த வழக்கு விசாரணை ஆக.22க்கு ஒத்திவைப்பு
நாகப்பட்டினம், ஜூலை 15: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக 8 கோட்டங்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்த 1995 பொது நிலையானை காமன் ஸ்டாண்டிங் ஆர்டர் (Common Standing Order)- ல், ஒழுங்கு நடவடிக்கைக்கான தண்டனை குறிப்பிடப்படாத சட்ட விரோதமான 1995 பொது நிலை ஆணை பயன்படுத்தி அனைத்து மண்டலங்களில் உள்ள 26 பொது மேலாளர்கள் தன்...
மயிலாடுதுறைக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; திமுகவினருக்கு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் அழைப்பு
மயிலாடுதுறை, ஜூலை 15: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகழக தலைவருமான மு.க ஸ்டாலின், இன்று,நாளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின், சுமார் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார்....
குத்தாலம் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா
குத்தாலம், ஜுலை 14: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 10 வகுப்பறை புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் வில்லவன்கோதை,...