நாகை அரசுகலை கல்லூரி சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி
நாகப்பட்டினம்,ஜூலை20: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி நடந்தது. முதல்வர் (பொ) அஜிதா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தை சென்றடைந்தது. மாவட்ட சட்டப் பணிகள் தன்னார்வலர்...
7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை20: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிங்காரவேல், மோகன், முகமதுஆரிப், நடராஜன், மீனாட்சி, சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன். மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, டாஸ்மாக்பணியாளர்...
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா
வேதாரண்யம், ஜூலை 20: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது....
கோடியக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அரசு அலுவலர்களும் மருத்துவ பரிசோதனை
வேதாரண்யம், ஜூலை 19: வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் உள்ள லயன்ஸ் அரங்கில் கோடியக்கரை, கோடியக்காடு ஊராட்சி களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ...
காலமுறை ஊதியம் வழங்ககோரி தொடக்க கல்வி ஆசிரிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 19: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சித்ராகாந்தி, மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பென்சன்...
கீழையூர் அருகே சோழவித்தியாபுரம் சந்தனமாதா ஆலய திருவிழா
கீழ்வேளூர், ஜூலை 19: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் சோழவித்தியாபுரத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட பொருளாளர் எஸ்.ஜேசுராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சாகுபடிக்கான தேவையான நீர் கிடைத்து விவசாயம்...
துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாகை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்: உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
நாகப்பட்டினம், ஜூலை 18: நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (19ம் தேதி) மின்விநியோகம் இருக்காது என மின் பகிர்மான கழக நாகப்பட்டினம் வடக்கு உதவி செயற்பொறியாளர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாகப்பட்டினம் துணைமின் நிலையத்தின் மின்பாதைகளில் நாளை(19ம்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம்...
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி
சீர்காழி, ஜூலை 18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்திக்கும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் காசிக்கு இணையான அக்னி, சூரியன், சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன....
சிக்கல் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நாகப்பட்டினம் கலெக்டர் மனுக்களை பெற்றார்
கீழ்வேளூர், ஜூலை 18: நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல், ஆவராணி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதே போல திருமருகல், மருங்கூர், நெய்குப்பை ஆகிய பகுதிகளுக்கான முகாம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை...