1008 வளையல் சிறப்பு அலங்காரம்

சீர்காழி, ஆக. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் கீழவீதி அருகே கோமளவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வளையல் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயிரத்தியெட்டு வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை...

திட்டச்சேரியில் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

By Karthik Yash
20 hours ago

கீழ்வேளூர், ஆக. 5: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை நாகூர் சாலை பகுதி சேர்ந்தவர் அப்துல் ஹமீது(75). இவர் நேற்று முன்தினம் காலை குளிப்பதற்காக ப.கொந்தகை பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அப்துல் ஹமீதை தேடி சென்றுள்ளனர். அப்போது குளத்தில் தவறி விழுந்து அப்துல்...

சீர்காழியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

By Karthik Yash
20 hours ago

சீர்காழி, ஆக. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம். சீர்காழி நகர திமுக பாக முகவர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னிலையில், திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ‌கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து...

நாகப்பட்டினம் / மயிலாடுதுறை மணல்மேடு அருகே ஆற்றுநீர் சுழலில் சிக்கி மாணவன் உயிரிழப்பு

By Francis
03 Aug 2025

  மயிலாடுதுறை, ஆக.4: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் மேலத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்திசிவன் (வயது17). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் கும்கி மண்ணியாற்றில் சட்ரஸ் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றுநீர் சுழலில் சிக்கி சக்திசிவன் மூழ்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை...

கொன்னகாட்டுப்படுகை கிராமத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

By Francis
03 Aug 2025

  கொள்ளிடம், ஆக.4: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையை மேம்படுத்த கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில், கீரங்குடி, சோதியக்குடி, சிதம்பநாதபுரம், மாதிரவேளூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம்...

திருக்குவளையில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து பரப்புரை

By Francis
03 Aug 2025

  கீழ்வேளூர், ஆக.4: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த பரப்புரை நடைபெற்றது. மத்திய அரசின் போலி(ஜூம்லா) பொய்யான தகவல்களும் அதன் உண்மை நிலையும் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட புத்தகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் மாநிலச் செயலாளர் வேதரத்தினம்...

கொள்ளிடம் அருகே செருகுடி ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

By Arun Kumar
02 Aug 2025

  கொள்ளிடம், ஆக.3: கொள்ளிடம் அருகே சிறுகுடி கிராமம் ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியை சேர்ந்த செருகுடி கிராமத்தில் உள்ளமாதானம் அருகில் செருகுடி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால்குட உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை...

சின்னம்மாள் காளியம்மன் கோயில் ஆடி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

By Arun Kumar
02 Aug 2025

  கீழ்வேளூர், ஆக.3: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொடியாலத்தூரில் காளியம்மன், அய்யனார் கோயில் 30ம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்றது. ஆடி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள சின்னம்மாள் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான பால விநாயகர், வரதராஜ பெருமாள் மற்றும் அய்யனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா...

நாகை புத்தக கண்காட்சியில் அஞ்சல் சேவைகளை அறிந்து கொள்ள அரங்கு

By Arun Kumar
02 Aug 2025

  நாகப்பட்டினம், ஆக.3: நாகப்பட்டினத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் அஞ்சல் துறையின் சேவைகளை அறிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோட்ட கண்காணிப்பாளர்ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாகப்பட்டினம் அரசு தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் வரும் 11ம் தேதி வரை புத்தக கண்காட்சி...

செம்பனார்கோயில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு

By Ranjith
01 Aug 2025

  செம்பனார்கோயில், ஆக.2: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செம்பனார்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், செவிலியர்களின்...