திறந்த நிலையில் உள்ள இரண்டு கிணறுகளுக்கு மூடி அமைக்க கோரிக்கை

  நாகப்பட்டினம், ஜூலை 28: திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீர் பயன்பாட்டிற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மன் கோவில் மற்றும் ஆர்ச் அருகில் 2 கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணறுகளை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். கிணற்றின்...

மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்

By Ranjith
27 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 28: நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் அருகே உள்ள பூங்காகை சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மேலகோட்டை வாசல் அருகே நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் குடும்பத்தோடு வருகை தருகின்றனர். எனவே இந்த பூங்காவை சுத்தம் செய்ய...

திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

By Ranjith
27 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 28: திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலு, பொருளாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிந்தன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் தர்மராஜ்...

காரைக்காலில் பள்ளி நேரத்தில் இயங்கிய மணல் லாரி பறிமுதல்

By Ranjith
25 Jul 2025

  காரைக்கால், ஜூலை 26: காரைக்கால் வருவாய்த்துறை வட்டாட்சியர் செல்லமுத்து தலைமையில், துணை வட்டாட்சியர் அரவிந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் செல்கிறதா என்று நேற்று முன்தினம் மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பட்டினம் அருகே மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று தார்ப்பாய் பொருத்தாமல் காற்றில்...

காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கு உதவித்தொகை

By Ranjith
25 Jul 2025

  காரைக்கால், ஜூலை 26: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தருமபுரம் வடக்கு தெருவில் உள்ள விக்னேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வீடு திடீரென தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வருவாய்த்துறை...

கீழ்வேளூர் அருகே வேளாண்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

By Ranjith
25 Jul 2025

  கீழ்வேளூர், ஜூலை 26: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடியில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 2025ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி கலந்து கொண்டு விவசாயிகளுக்கும், கல்லூரி...

பொதுமக்களை எரிச்சலுக்குள்ளாக்கிய பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்

By MuthuKumar
24 Jul 2025

காரைக்கால், ஜூலை 25: காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் தமிழகப் பகுதி மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் குறிப்பாக கும்பகோணம், திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனியார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் நகரப் பகுதிகளான திருநள்ளார், திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி வழித்தடங்களில்...

மயிலாடுதுறையில் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

By MuthuKumar
24 Jul 2025

மயிலாடுதுறை, ஜூலை 25: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. ...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நியமன உறுப்பினர் மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க காலக்கெடு 31ம் தேதி வரை நீடிப்பு : நாகை கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு

By MuthuKumar
24 Jul 2025

நாகப்பட்டினம், ஜூலை 25: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறானிகளை...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவாலயங்களை புனரமைக்க அரசு மானியம்

By MuthuKumar
23 Jul 2025

நாகப்பட்டினம், ஜூலை 24: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு அரசு மானியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறயிருப்பதாவது: தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம்...