நாகை மாவட்டத்தில் ஆக.2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

  நாகப்பட்டினம், ஜூலை 31: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து முதல்வரின் வழிகாட்டுதலோடு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே பாப்பாகோயில் பகுதியில் உள்ள சர்...

செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது

By Ranjith
29 Jul 2025

  செம்பனார்கோயில், ஜூலை 30: செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்.இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்....

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

By Ranjith
29 Jul 2025

  மயிலாடுதுறை, ஜூலை 30: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, ஒரு குடும்பம் ஆண்டிற்கு 5 இலட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர்...

நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

By Ranjith
29 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 30: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளக புகார் குழு மற்றும் பாலின உளவியல் குழு சார்பில் பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் அஜிதா தலைமை வகித்தார். வானவில் தொண்டு நிறுவன இயக்குநர் ரேவதி பேசினார். உடற்கல்வி இயக்குனர் மற்றும் பாலின உளவியல்...

கூத்தியம்பேட்டையில் உருகுலைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி: புதிதாக அமைக்க கோரிக்கை

By Neethimaan
28 Jul 2025

கொள்ளிடம், ஜூலை 29: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உருகுலைந்த சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உள்ள ராக்க பெருமாள் கோயிலுக்கு, மெயின் ரோட்டிலிருந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் நீள தார் சாலை உருகுலைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு செல்ல...

பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதி; பச்சைபிள்ளையார் கோவில் தெருவில் சுகாதார சீர்கேடு: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு

By Neethimaan
28 Jul 2025

நாகப்பட்டினம், ஜூலை 29: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் பச்சை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பச்சை பிள்ளையார் கோவில் தெருவில்...

கோடியக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் குழந்தைகளை செடிலில் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்

By Neethimaan
28 Jul 2025

வேதாரண்யம், ஜூலை 29: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற செடில் உற்சவத்தில், ஏராளமான குழந்தைகளை ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிராமத்தில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. நேற்று ஒன்பதாம் நாள்...

திறந்த நிலையில் உள்ள இரண்டு கிணறுகளுக்கு மூடி அமைக்க கோரிக்கை

By Ranjith
27 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 28: திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீர் பயன்பாட்டிற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மன் கோவில் மற்றும் ஆர்ச் அருகில் 2 கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணறுகளை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். கிணற்றின்...

மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்

By Ranjith
27 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 28: நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் அருகே உள்ள பூங்காகை சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மேலகோட்டை வாசல் அருகே நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் குடும்பத்தோடு வருகை தருகின்றனர். எனவே இந்த பூங்காவை சுத்தம் செய்ய...

திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

By Ranjith
27 Jul 2025

  நாகப்பட்டினம், ஜூலை 28: திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலு, பொருளாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிந்தன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் தர்மராஜ்...