மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அலங்காநல்லூர், ஜூலை 11: அலங்காநல்லூர் அருகே பி.சம்பகுளம் கிராமத்தில் இரட்டை விநாயகர், அய்யனார், கருப்புசாமி, மந்தையம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் யாகசாலை பூஜையில் 21 குடங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டு இருந்தது....
ஆன்லைன் ரம்மியால் கடன் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
அவனியாபுரம், ஜூலை 11: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மனைவி ரதிப்பிரியா அளித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்....
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் ஒன்றியப் பேரவை தொடக்க விழா
மதுரை, ஜூலை 10: மதுரையில் உள்ள சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில், ஒன்றியப் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மதுரை, பெருங்குடியில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி ஒன்றியப்பேரவை தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறைத்தலைவர் எம்.புஷ்பராணி வரவேற்றார். ஆலோசகர்...
ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூலை 10: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும். 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த...
மணல் திருடுவோர் மீது வழக்கு
மதுரை, ஜூலை 10: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உன்னியூரைச் சேர்ந்த ரகுராமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உன்னியூர் காவிரி ஆற்றில் புதிய மணல் குவாரி துவக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மட்டுமின்றி, சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கும். எனவே, ஆற்றில் மணல் அள்ள...
கோயில் நிலத்திலுள்ள மாநகராட்சி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வழக்கு
மதுரை, ஜூலை 9: ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் முன்பு ஸ்ரீ ரங்கம் நகராட்சிக்கு சொந்தமானது என கூறப்பட்ட நிலையில், 2023ம் ஆண்டு ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு...
நாளைய மின்தடை பகுதிகள்
மதுரை, ஜூலை 9: மதுரை ஆனையூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மதுரை வண்டியூர் துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பாலமேடு மெயின் ரோடு சொக்கலிங்கநகர் 1வது தெரு முதல் 7 வது தெரு வரை பெரியார் நகர், அசோக் நகர்,...
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி வெயில்
மதுரை, ஜூலை 9: தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை மாவட்டங்களில்...
இளநீர் வியாபாரம் விறுவிறு
மதுரை, ஜூலை 7: மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான...