பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஜூலை 18: பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து, பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று மதுரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, தல்லாகுளம் பிஎஸ்என்எல் வளாகத்தின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் தொலைத்தொடர்பு அலைவரிசை சார்ந்த வாடிக்கையாளர்களின் குறைகள், பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்க தொடர்ந்து...
திருமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி தலைவர் துவக்கினார்
திருமங்கலம், ஜூலை 18: உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை, திருமங்கலம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துகுமார் நேற்று துவக்கி வைத்தார். திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை, நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக்கி வைத்தார். நகராட்சியில் முதல், இரண்டாம் மற்றும் எட்டாம்...
வழக்கு செலவுக்காக கஞ்சா விற்ற ரவுடி கைது
மதுரை, ஜூலை 18: மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் திருப்பதி (எ) கவாத்து திருப்பதி(50). பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ...
உதவித் தொகையை உயர்த்த கோரிக்கை
மதுரை, ஜூலை 17: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வில், வெற்றி பெறும் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒன்றிய அரசு ஆண்டு தோறும் 8ம் வகுப்பில் தேசிய...
சிவகங்கை சாலை விரிவாக்க திட்டம் விரைவில் கட்டிடங்கள் இடிப்பு
மதுரை, ஜூலை 17:மதுரை கலெக்டர் அலுவலக சந்திப்பு முதல் ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு வரை போக்குவரத்து சிக்னல்களை அகற்றி ரவுண்டானாவுடன், மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள், ரூ. 150.23 கோடியில் நடந்து வருகின்றன. தற்போது,, மேம்பால பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக ரவுண்டானா அமைக்க நில ஆர்ஜித பணிகளுக்காக நோட்டீஸ்...
மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க கூட்டம்: கோ.தளபதி எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை, ஜூலை 17: மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் மதுரை எல்லீஸ் நகர் பகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட...
மாநகர் மாவட்ட திமுக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை
மதுரை, ஜூலை 16: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மதுரை விளக்குத்தூணில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் வ.வேலுசாமி, உயர்நிலை செயல்திட்ட குழு...
மகன் இறந்த சோகத்தில் மயங்கி விழுந்த தந்தை சாவு
மதுரை, ஜூலை 16: சிலைமான் அருகே கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் அரசு(18). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அழகுபாண்டி அவரது பள்ளி நண்பர் அரசுவை போலீஸ் பேசுவது போல பிராங்க் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து, இது பிராங்க் என அரசு குடும்பனத்தினருக்கு...
கொட்டாம்பட்டி அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் பலி
மேலூர், ஜூலை 16: கொட்டாம்பட்டி அருகே, அனுமதியின்றி நடத்திய வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலியானார். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே, கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புதூர் கிராமம். இங்குள்ள மூவிடையப்பன் கண்மாயில், கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக மதுரை மாவட்டத்தின் பல்வேறு...