சோழவந்தான் அருகே பரிதாபம் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
சோழவந்தான், அக். 18: சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி விஜயா(53). இவர் கடந்த 14ம் தேதி மதுரை, பெரியார் நிலையத்தில் இருந்து மன்னாடி மங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகபுரம் காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஓடும் பேருந்திலிருந்து திடீரென தவறி சாலையோரம் விழுந்த...
பறவைகளை வேட்டையாடினர் துப்பாக்கியுடன் 3 நபர்கள் கைது
மதுரை, அக். 18: மேலூர் அருகே மருதூரில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனக்குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் மதுரை பிரிவு வனச்சரகர் சிக்கந்தர் பாட்ஷா தலைமையிலானஅதிகாரிகள் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது, மூன்று பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது திருவாதவூரைச் சேர்ந்த மருதுபாண்டியன் (48),...
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
மதுரை, அக். 17: மதுரையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு...
கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
மதுரை, அக். 17: கொலை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கள்ளிக்குடி அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (65). இதே ஊரைச் சேர்ந்தவர் செல்வகண்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 16.5.2021ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவு புளியம்பட்டி பொது மந்தையில் தூங்கி கொண்டிருந்த செல்வக்கண்ணன் தலையில் ராமராஜ்...
மாநகராட்சி பள்ளியில் ‘ஸ்மார்ட் டிவி’
மதுரை, அக். 17: மதுரை செனாய் நகரில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மருத்துவ நுழைவு தேர்விற்கான பயிற்சி வகுப்பு மற்றும் தினசரி பாடப்பயிற்சிக்காக இந்த டிவி...
டூவீலர் திருடிய வாலிபர் கைது
மதுரை, அக். 16: மதுரை, மேல கைலாசபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கினார். அடுத்தநாள் காலையில் காலை எழுந்தபோது அந்த இரு சக்கர வாகனம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி,...
கொத்தனார் மர்மச்சாவு
மதுரை, அக். 16: மதுரை, கோச்சடை பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி(49). கொத்தனாரான இவரது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயபாண்டி வீட்டில் இருந்து வெளியேறி நாகமலை புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கோச்சடை பஸ் ஸ்டாப் முன்பாக நேற்று முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் அவர்...
அணுகுசாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
மதுரை, அக். 16: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரைசெல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மதுரை மார்க்கத்தில், ஒன்றிய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரையில் உள்ள முடக்குச் சாலை சந்திப்பில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் கீழ் முடக்குச்சாலை சந்திப்பில் இருந்து டிவிஎஸ் பஸ் நிறுத்தம் வரை சுமார்...
மதுரையில் 16 வார்டுகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கும் சிறப்பு முகாம் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது
மதுரை, அக். 14: மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை வடகரையில் அமைந்துள்ள 16 வார்டுகளில் உள்ள சுமார் 43,211 கட்டிடங்களுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைப்பு பெற்றவர்கள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சிறப்பு...