மதுரையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி
மதுரை, செப். 9: மதுரை, அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆக.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலியை பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு...
பட்டாசு விற்பனை உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
மதுரை, செப். 9: மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்பான தற்காலிக உரிமம் பெற பலரும் விரும்புகின்றனர். இவர்கள் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 பிரிவு 84ன் கீழ் அரசின் நடைமுறைகளை பின்பற்றி செப்.20ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பங்களை இ சேவை மையங்கள் உதவியுடன் இணைய வழியாக...
கோரிப்பாளையம் மேம்பால திட்டம்: நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவு
மதுரை, செப். 3: கோரிப்பாளையம் மேம்பால திட்டத்திற்காக நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை கோரிப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் ரூ.190.40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நில...
இந்த கல்வியாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
மதுரை, செப். 3: இந்த கல்வியாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை வழங்கி மாணவர் சேர்க்கையினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று முதல் சிலம்பம் போட்டிகள் நடைபெறும்: அதிகாரிகள் தகவல்
மதுரை, செப். 3: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான நீச்சல், கபடி, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல் முதுநிலை மேலாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர், பயிற்சியாளர்கள் உள்பட் பலரும் பங்கேற்றுள்ளனர்....
திருமங்கலத்தில் பொக்லைன் மோதியதில் மின் கம்பம் சாய்ந்தது: பலமணி நேரம் மின்தடை
திருமங்கலம், செப். 2: திருமங்கலம் விமானநிலையம் ரோட்டில் பொக்லைன் இயந்திரம் மோதியதால் மின்கம்பம் சாய்ந்து கம்பிகள் அறுந்தன. இதனால் புறநகர் பகுதியில் பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருமங்கலம் - மதுரை விமான நிலையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம்...
செப்.5ல் தொடங்குகிறது மதுரையில் புத்தக திருவிழா; எம்பி வெங்கடேசன் அழைப்பு
மதுரை, செப். 2: மதுரையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தின் 20வது புத்தக திருவிழா வரும், 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே...
பொதுமக்களுக்கான குறைதீர் முகாம்
மதுரை, செப். 2: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் முகாமில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர். பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று கலெக்டர்...
தாட்கோ சார்பில் வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி விடுதி, உணவு இலவசம்
மதுரை, ஆக. 30: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்ற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியுடன், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்...