செல்லூர் கால்வாய் பணி நிறைவு
மதுரை, ஆக. 6: செல்லூர் கண்மாயிண் உபரிநீர் வெளியேறுவதற்காக கட்டப்படும் சிமென்ட் கால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில், முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வெள்ள...
ஏஐடியூசி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 6: மதுரையில் உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஏஐடியூசி அமைப்பின் சார்பில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல அலுவலகம், பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஏஐடியூசி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மூத்த தலைவர் அலாவுதீன்,...
அழகர்கோயிலில் ஆக.9 தேரோட்டம் தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
மதுரை, ஆக. 5: அழகர்கோயிலில் ஆக.9ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், தேர் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த ஆக.1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து...
மக்களை மகிழ்விக்கும் வகையில் மதுரையில் கொட்டிய மழை
மதுரை, ஆக. 5: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களில் மாநிலத்திலேயே அதிக அளவில் வெப்பநிலை பதிவானது. மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டாலும், மழை பெய்யாமல் கலைந்து சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது....
அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரம்
அலங்காநல்லூர், ஆக. 5: அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில், ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மை மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ...
உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு இயற்கை மருத்துவம் வழிகாட்டல்
மதுரை, ஆக. 4: மதுரை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவின் தலைமை டாக்டர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: இக்காலத்தில் ‘ஒபிசிட்டி’ எனும் உடல்பருமன் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மருந்து, மாத்திரைகள் தவிர்த்து வாழ்வியலோடு இணைந்து இதனை கட்டுப்படுத்தலாம். வாரம் ஒருமுறை உண்ணா நோன்பிருப்பது, தினமும் 30 நிமிடம் யோகா, காலை மாலையில் 30 நிமிடம்...
காந்தியடிகளின் தலைமை பண்பு கருத்தரங்கம்
மதுரை, ஆக. 4: தலைமை பண்பின் மகத்துவம் - காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசும்போது, ‘‘காந்தியடிகள் குறித்து இன்றும் நாம் பேசுகிறோம் என்றால், அதற்கு அவருடைய தலைமை...
முதியவர் கொலை; மகன் கைது
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டப்புளிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று அதிகாலை வீட்டின் முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். சமயநல்லூர் போலீசார் அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் அவர் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கருதினர்....
மக்களை தேடி வரும் மருத்துவ உதவிகள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்
மதுரை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் ஒரு வட்டாரத்திற்கு 3 வீதம் 39 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 5 முகாம்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதி சனிக்கிழமை தோறும் 17 சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில்...