கடைகள், வாகனங்களை சூறையாடிய கும்பல்
மதுரை, அக். 11: வண்டியூரில் குடிபோதையில் கடைகள், வாகனங்களை நொறுக்கிய கும்பலால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த கும்பல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள், கார்களை அடித்து சேதப்படுத்தியதுடன், கடைகளையும் அடித்து...
டூவீலர் திருடிய வாலிபர் கைது
மதுரை அக். 10: ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் தனது மனைவியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து மனைவியை பார்க்க டூவீலரில் வந்த அவர், வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்த போது அவரது டூவீலர் திருடு போனது தெரியவந்தது....
உலக தபால் தினத்திற்கான விழிப்புணர்வு நடைபயணம்
மதுரை, அக். 10: உலக தபால் தினத்தை முன்னிட்டு, மதுரையில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மதுரை கோட்ட அஞ்சல்துறை சார்பில் நடந்த இப்பயணம், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயில் முன்பிருந்து துவங்கி, தெப்பக்குளத்தை சுற்றி வந்தது. இந்த நடைபயணத்தில் மதுரை அஞ்சல் கோட்ட முதன்மை கண்காணிப்பாளர் ரவி ராஜ்வதக். தென்மண்டல...
பைனான்ஸ் நிறுவனத்தினர் மீது வழக்கு
மதுரை, அக். 10: மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வண்டியூர் மெயின்ரோடு தாசில்தார்நகர் பகுதியில் இருந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். இந்நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜீவனா என்ற சாந்தாஜென்சி மற்றும் சீத்தாராமன் ஆகியோரை சந்தித்து, கடந்த 2021 டிசம்பர் மாதம் ரூ.2 லட்சம் முதலீடு செய்தார்....
எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர் கைது
அவனியாபுரம், அக்.9: மதுரை மாநகராட்சி பகுதியான அவனியாபுரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சாலையில் அதிமுகவினர் சார்பில் 1990ம் ஆண்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இந்த சிலையை சேதப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே சிலையை...
ரூ.5000 தீபாவளி போனஸ் தேவை கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை, அக். 9: கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை எல்லீஸ் நகர் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர்...
ரேஷன் குறைதீர் முகாம்
மதுரை, அக். 9: பொது விநியோக திட்ட சேவைகள் குறித்த பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் வரும் அக்.11ம் தேதி) குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம்,...
ஜவுளிக்கடை முன்பு சடலம்
மதுரை, அக்.8: மதுரையில் ஓவியர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை சிம்மக்கல் கருவேப்பிள்ளைக்காரத்தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(52). இவர் ஓவியராக இருந்தார். மனைவியை விட்டு பிரிந்து விளாங்குடியில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடை முன்பாக அவர் திடீரென இறந்து கிடப்பதாக மனைவி பாண்டீஸ்வரி(47) என்பவருக்கு...
குறுக்கே டூவீலர் வந்ததால் தலை குப்புற கார் கவிழ்ந்து விபத்து
மதுரை, அக்.8: குறுக்கே பைக்கில் வந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மதுரையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் இன்பா. இவர் நண்பர்களுடன் கோரிப்பாளையத்தில் இருந்து வைகை தென்கரை பிரதான சாலையில் அதிவேகமாக சொகுசு காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே முதியவர் ஒருவர்...