ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் தகவல்
மதுரை, ஜூலை 31: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வரும் 1ம் தேதி, 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே மதுரையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர், ராமேஸ்வரம்,...
செல்லூர் சிமென்ட் கால்வாய் திட்டம் ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
மதுரை, ஜூலை 31: வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில் முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரூ.15.10 கோடியில் புதிதாக சிமென்ட் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த மாத இறுதியில் செல்லூர்...
மெடிக்கல்லில் ரூ.1.25 லட்சம் கையாடல்
மதுரை, ஜூலை 30: மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் முதல் தெருவில் பிரபல மருத்துவமனையின் மருந்துக்கடை உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக பரமக்குடி அருகே ஏந்தல் கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (50) பணிபுரிந்து வந்தார். இவர் மருந்து கடையில் ரூ.50 ஆயிரம் சம்பள அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இதில் ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பி செலுத்திய நிலையில் திடீரென...
2 கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது
மதுரை, ஜூலை 30: மதுரை முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கையில் வெள்ளை சாக்கு மற்றும் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா...
சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூலை 30: சாலைப்பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கட்டுமான பராமரிப்பு அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி...
திருமங்கலம் அருகே சர்வீஸ் சாலைக்கு எதிராக மறியல்
திருமங்கலம், ஜூலை 29: திருமங்கலம் அருகே புதிதாக அமைக்கப்படும் சர்வீஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் பகுதியில் நான்கு வழி சாலைக்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்...
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மதுரை, ஜூலை 29: பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று தீர்வு காணும் வகையில், குறைதீர் கூட்டம் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் பிரவின்குமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மதுரையை அடுத்த தட்டாங்குளம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில்...
திருப்பரங்குன்றத்தில் தனியார் பஞ்சு குடோனில் தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
திருப்பரங்குன்றம், ஜூலை 29: திருப்பரங்குன்றத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அங்கு வழக்கம்போல்...
கொட்டாம்பட்டி பகுதியில் நலத்திட்ட உதவி பெண்களின் பெரும் ஆதரவோடு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் பி.மூர்த்தி உறுதி
மேலூர், ஜூலை 28: கொட்டாம்பட்டி பகுதியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பி.மூர்த்தி, பெண்களின் ஆதரவோடு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, கொட்டாம்பட்டியில் உள்ள எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, பட்டூர், மேலவளவு ஊராட்சிகளில் திமுக சார்பில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள்...