மேலூர் சாலையில் ஆபத்தான வளைவு
மதுரை, ஜூலை 28: மதுரையை அடுத்த கள்ளந்திரி முதல் மேலூர் வரையிலான 16 கி.மீ தூர சாலையில் கிடாரிபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இச்சாலையில் கிடாரிபட்டியிலிருந்து அ.வல்லாளபட்டி செல்லும் முன்புள்ள ஆபத்தான வளைவு மற்றும் போதிய மின்விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல்...
வங்கியில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி; மதுரை கமிஷனரிடம் மயிலாடுதுறை ஐடி ஊழியர்கள் புகார்
மதுரை, ஜூலை 26: தேசிய வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி நடந்துள்ளதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த 2...
ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வூதியர்கள் மனிதச்சங்கிலி
மதுரை, ஜூலை 26: மதுரை காந்தி மியூசியம் அருகே, ஒன்றிய, மாநில ஓய்வூதியர் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் பிச்சைராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு 1972ல் நிறைவேற்றிய பென்சன் விதிகளில் திருத்தம் செய்துள்ளது....
அப்துல்கலாம் நினைவு தினம்
மதுரை, ஜூலை 26: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் 10ம் ஆண்டு நினைவு நாள் நாளை (ஜூலை 27) நாடு முழுதும் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி மதுரையில் உள்ள தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாணவர்கள் அவரது பெயர் வடிவில் பத்து நிமிடங்கள் பத்து வினாடிகள் ஒன்றிணைந்து நின்றிருந்தனர். பின்னர்...
கட்டுமான பொருட்கள் மீது பச்சை வலையால் மூடப்பட வேண்டும்
மதுரை, ஜூலை 25: புதிய கட்டுமானங்களுக்கான பொருட்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்க, பச்சை வண்ண வலை கொண்டு மூட வேண்டுமென மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அறிக்கை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் நடைபெறும்போது, கொண்டு செல்லப்படும், சேகரித்து வைக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் காற்றில் பறந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி...
சைபர் குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மதுரை ஜூலை 25: மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் உள்ள கல்லூரியில். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திலகர் திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்பது குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல் சைபர் குற்றங்களில் பெண்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்....
மதுரையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மதுரை, ஜூலை 24: மதுரையில் இன்று (ஜூலை 24) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மாநகராட்சியின் 7 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக 4 இடங்களில் நடக்கிறது. இதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் வார்டு 8, வார்டு 11 ஆகிய பகுதிகளுக்கு சர்வேயர் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இந்த முகாம் நடக்கிறது. மண்டலம்...
மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு: மேயர், கமிஷனர் பங்கேற்பு
மதுரை, ஜூலை 24: மதுரை, கரும்பாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக இரு வகுப்பறை கட்டிடங்கள் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டன. இவற்றை மேயர் இந்திராணி, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, கோ.தளபதி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். தொடர்ந்து மேயர், கமிஷனர்...
மதுரையில் பரபரப்பு ரூ.3.74 கோடி ஹவாலா பணம், கார் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
மதுரை ஜூலை 24: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில், சட்டவிரோதமாக ஒரு கும்பல் ஹவாலா பணத்தை காரில் வைத்து கை மாற்றுவதாக விளக்குத்தூண் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் பணத்தை கைமாற்றும் வேலையில் இருந்த...