வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி: நாளை செலுத்தப்படுகிறது
மதுரை, செப். 27: ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினம் செப்.28ம் தேதி (நாளை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மதுரை, தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர்...
இலவச வீட்டுமனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: வாடிப்பட்டியில் பரபரப்பு
வாடிப்பட்டி, செப். 26: இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி கேட்டு, வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் வாசித்து வரும் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்....
பராமரிப்பு பணிகள் நிறைவு; திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்தது: பயணிகள் உற்சாகம்
திருமங்கலம், செப். 26: பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் மூடப்பட்ட திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் பெரியதாக இருக்கும் திருமங்கலத்தில், கடந்த 50 ஆண்டுகளாக மதுரை மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. திருமங்கலத்திலிருந்து மதுரை...
ரூ.27 லட்சம் மின் சாதனங்கள் திருட்டு
பேரையூர், செப். 26: சேடபட்டி அருகே அல்லிகுண்த்தை சேர்ந்தவர் சின்னமூக்கன். இவரது விவசாய தோட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைத்துள்ளனர். அதற்கு கடந்த 2009ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தோட்டத்து உரிமையாளருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் வாடகை பணத்ை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் அலைக்கற்றை நிறுவனம்...
பணி மேம்பாட்டு ஊதியம் கோரி ஏயூடி - மூட்டா சங்கம் ஆர்ப்பாட்டம்
மதுரை, செப். 25: மதுரை, கோரிப்பாளையத்தில் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக ஏயூடி - மூட்டா சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பல்கலைக்கழக மானியக்குழு 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கான அரசாணை 2021ல் வௌியிடப்பட்டது. அரசுக்கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு...
உழவர் நல சேவை மையம் திட்டம்
உசிலம்பட்டி, செப். 25: உசிலம்பட்டியை அடுத்த செல்லம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார. இதுகுறித்த அவரது அறிக்கை: வேளாண்மையில் பட்டம், பட்டய படிப்புகளை முடித்தவர்கள், சுயதொழில் துவங்கும் வகையில், உழவர் நல சேவை மையம் அமைக்கப்படுகிறது....
முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட உதவி
மதுரை, செப். 25: மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகிறது. இதன்படி அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக, வாரந்தோறும் புதன்கிழமைகளில் இலவச சட்ட உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்...
பைக் திருடிய வாலிபர் கைது
மதுரை, செப். 24: ஐராவதநல்லூரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் நவீன்குமார்(34). வெளியே சென்று விட்டு வீட்டிற்கு செப்.21 அன்று மதியம் வந்தார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இது குறித்து தெப்பக்குளம் போலீசில் நவீன்குமார் அளித்த புகாரின்...
அக்.2ல் இறைச்சி விற்பனைக்கு தடை
மதுரை, செப். 24: மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுப் பகுதிகளில் வரும் அக்.2 வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணைப்படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும்...