பைக் திருடிய வாலிபர் கைது
மதுரை, செப். 24: ஐராவதநல்லூரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் நவீன்குமார்(34). வெளியே சென்று விட்டு வீட்டிற்கு செப்.21 அன்று மதியம் வந்தார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இது குறித்து தெப்பக்குளம் போலீசில் நவீன்குமார் அளித்த புகாரின்...
அக்.2ல் இறைச்சி விற்பனைக்கு தடை
மதுரை, செப். 24: மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுப் பகுதிகளில் வரும் அக்.2 வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணைப்படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும்...
சாலை விபத்தில் கொத்தனார் பலி
வாடிப்பட்டி, செப். 23: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (45). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் இரவு வாடிப்பட்டியிலிருந்து குட்லாடம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மினிப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமணம் மண்டபம் முன்பாக திடீரென்று நிலை தடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த...
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில் சுற்றுலா திட்டம் பக்தர்களுக்கு அழைப்பு: ஒரே நாளில் பல இடங்களில் தரிசனம்
மதுரை, செப். 23: புரட்டாசி மாதத்தில் ஒரே நாளில் பல இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்யும் வகையில், பக்தர்களுக்கான சிறப்பு சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து...
சர்வதேச அமைதி தின கருத்தரங்கம்
மதுரை, செப். 23: மதுரை காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில், சர்வதேச அமைதி தின சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பேராசிரியர் நடராஜ் அமைதிக்கான வழிமுறைகள் குறித்து பேசினார். கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர், உதவிப் பேராசிரியர் கிருஷ்ணராஜ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சி...
சாலையோர குப்பைகளால் அவதி: அகற்றிட பொதுமக்கள் கோரிக்ைக
மதுரை, செப். 22: காதக்கிணறு பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அழகர்கோயில் சாலையில், கடச்சனேந்தலை அடுத்துள்ள காதக்கிணறு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சேகரமாகும்...
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு பொதுமக்கள் பங்கேற்பு
மதுரை / சோழவந்தான், செப். 22: புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரை, சோழவந்தானில் உள்ள வைகை ஆற்றங்கரையில், பொதுமக்கள் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர்களுக்கு ஆடி, தை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் புரட்டாசி...
போலீசிடம் தப்பிய கைதி சிக்கினார்
மதுரை, செப். 22: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் நாகராஜ்(24). இவரை போக்சோ வழக்கில் நேற்று கரிமேடு போலீசார் கைது செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த அவரை ஆட்டோவில் போலீஸார் அழைத்துச் சென்றனர். வழியில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆவணம் ஒன்றை...
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
மதுரை, செப். 19: மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள, மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை பெருநகர் வட்டம், மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி, உதவி செயற்பொறியாளர்கள், மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்....