அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா
கிருஷ்ணகிரி, அக். 30: பர்கூர் ஒன்றியம், வெண்ணாம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழாசிரியை அமலா ஆரோக்கியமேரி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆங்கில விரிவுரையாளர் உமாபிரியா பங்கேற்று, இலக்கியம் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில்,...
விவசாயியை தாக்கிய வெல்டிங் தொழிலாளி
கிருஷ்ணகிரி, அக்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் பிபிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (40), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தை, அதேஊரை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியரான முனீர் என்பவருக்கு விற்றுள்ளார். இதற்காக முதல் தவணையாக முனீர் ரூ.15 லட்சத்தை வேலுவிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ.6 லட்சம் பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் பல மாதங்களாக முனீர்...
மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
ஊத்தங்கரை, அக்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில், கிருஷ்ணகிரி தனிப்படை எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ வெங்கடாஜலம் மற்றும் போலீசார் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக, ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில், அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்த அன்பழகன் (65) என்பவரை கைது செய்தனர். அவரிடம்...
தேன்கனிக்கோட்டையில் 17 வயது சிறுமி மாயம்
தேன்கனிக்கோட்டை, அக்.29: தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவைச் சேர்ந்த தொழிலாளியின் 17 வயது மகள் பிளஸ்1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்...
பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை 3 வியாபாரிகள் அதிரடி கைது
கிருஷ்ணகிரி, அக்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஏட்டு சீனிவாசன் மற்றும் போலீசார், பி.கொத்தூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். இதே போல், கந்திகுப்பம் எஸ்எஸ்ஐக்கள் ராஜேஸ்வரி, சேகர் ஆகியோர் சின்ன...
கன்டெய்னர் லாரியில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூர், அக்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் ஓசூர் ராயக்கோட்டை சாலை பைரமங்கலம் ஜங்ஷன் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றனர். அப்போது டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதையடுத்து போலீசார் கன்டெய்னர் லாரியை துரத்தினர். அப்போது, டிரைவர் வாகனத்தை நிறுத்தி...
பானிபூரியில் நெளிந்த புழுக்கள்
ஓசூர், அக்.28: சூளகிரி அருகே பீலாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா. இவர் தனது நண்பர்களுடன் சூளகிரிக்கு வந்தார். அங்கு அவர் பானி பூரி சாப்பிட விரும்பி, சூளகிரி ரவுண்டானா அருகேயுள்ள ஒரு பானிபூரி கடைக்கு சென்றார். அங்கு தனக்கும், நண்பர்களுக்கும் சேர்த்து, 4 பிளேட் பானிபூரி ஆர்டர் செய்தார். அதனை வாங்கி ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கிய...
கஞ்சா பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி, அக்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி எஸ்ஐ அசோக்குமார் மற்றும் போலீசார், சூளகிரி பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 2 வாலிபர்களிடம், விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அருகில் உள்ள பீரேபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23), சூளகிரி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(24) என்பதும்,...
உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே வாடும் செண்டுமல்லி பூக்கள்
ஓசூர், அக்.26: ஓசூர் பகுதியில் செண்டுமல்லி விலை சரிவால், பூக்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளதால் வாடி வதங்கி வீணாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பாகலூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா சாகுபடி செய்துள்ளனர். தோட்டத்தில் அறுவடை செய்யும் பூக்களை ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து பல்வேறு...