326 கிலோ கடத்தல் குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல்
ஓசூர், ஜூலை 15: ஓசூர் அருகே மினிவேனில் கடத்தி வந்த குட்கா, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சிப்காட் பகுதியில், எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மினிவேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்....
ஊத்தங்கரை அருகே வாலிபர் மாயம்
ஊத்தங்கரை, ஜூலை 15: ஊத்தங்கரை காந்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் (25). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், தாத்தா மணியுடன் வசித்து வந்தார். லோகநாதன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், லோகநாதனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அழைத்துக்கொண்டு மணி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மீண்டும் இருவரும் பேருந்தில் வீடு திரும்பினர்....
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யவும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள், திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை...
சூறைக்காற்றுடன் பலத்த மழை
தேன்கனிக்கோட்டை, ஜூலை 14: தேன்கனிக்கோட்டை அருகே, பாலதோட்டனப்பள்ளி பகுதியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி தாலுகாவில் மானாவரி பயிர்களான ராகி, நிலக்கடலை, எள், சாமை, துவரை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த மே மாதம் முழுவதும் கேடை மழை பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால்...
பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைவு
ஓசூர், ஜூலை 14: வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம், புக்கசாகரம் கிராமத்தில், திமுக வர்த்தக அணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ முருகன், பொதுக்குழு...
அனுமன், கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை
ஓசூர், ஜூலை 11: பேரிகை அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னராய சுவாமி கோயிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பிரதிஷ்டை வைபவம் நடைபெற்றது. சூளகிரி அருகே எஸ்.தட்டனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சென்னராய சுவாமி கோயிலில், வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டாபனம் நடைபெற்றது. மேலும், பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடி எனப்படும்...
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி, ஜூலை 11: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்ஜிஆர் நகரில், முத்துமாரியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவினையொட்டி மேளதாளம், பம்பை முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. எம்ஜிஆர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முத்துமாரியம்மன் சிறப்பு...
பைக் கவிழ்ந்து வாலிபர் பலி
தேன்கனிக்கோட்டை, ஜூலை 11: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வானமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(26). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து, இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வானமங்கலம் அருகே பஞ்சேஸ்வரம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய பைக், நடுரோட்டில்...