சூதாடிய 17 பேர் கைது: ரூ.1.40 லட்சம் பறிமுதல்
போச்சம்பள்ளி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள கிட்டனூர் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அங்குள்ள மாந்தோப்பில் சூதாடி கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர். அப்போது அவர்களில் சிலர் தப்பினர். போலீசாரின் பிடியில் சிக்கிய 17 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.40...
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போச்சம்பள்ளி, அக்.18: போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை சார்பில் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, ஒத்திகை நிகழ்ச்சி...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
தேன்கனிக்கோட்டை, அக்.17: தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவி தொகை, ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, காப்பீடு அட்டை, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைத்து அதிகாரிகள் மனுக்கள்...
அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞர் தினமாக அனுசரிப்பு
ஓசூர், அக். 17: ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 93வது பிறந்தநாள், உலக இளைஞர் தினமாக கொண்டாட்டப்பட்டது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அப்துல்கலாமின் செயல்பாடு மற்றும் பெருமைகளை எடுத்துரைத்தார். கல்லூரி ஆராய்ச்சி துறை தலைவர் சுரேஷ்பாபு, கல்வி பிரிவு தலைவர் வெங்கடேசன், செல்வம், தனசேகர்,...
மண் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே, தேவசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சீதா மற்றும் அலுவலர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ.2500 மதிப்புள்ள 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து,...
நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
போச்சம்பள்ளி, அக்.16: போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ்(55). விவசாயியான இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு பின்பு வழக்கம்போல் ஆடுகளை வீடுடிற்கு அருகே உள்ள பட்டியில் அடைத்துச் சென்றார். நள்ளிரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்து குதறின. சத்தம் கேட்டு தேவராஜ் பட்டிக்கு விரைந்து சென்றார். அங்கு,...
அரசு மகளிர் கல்லூரியில் கலைத்திருவிழா போட்டிகள்
கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில், கவிதை, கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி ஆகியவை நடந்தது. இப்போட்டிகளை கல்லூரி முதல்வர் கீதா தொடங்கி வைத்தார். கவிதைப் போட்டியில் 13 மாணவ, மாணவியர், கட்டுரை...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஊத்தங்கரை, அக்.16: ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி, சந்திரப்பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தவமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான ரஜினி செல்வம், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முகாமில்...
மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
வேப்பனஹள்ளி, அக். 14: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றப்புற கிராமங்கள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வழக்கமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். கடந்த ஒரு வாரமாக இப்பகுதி முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மார்கண்டேயன் ஆறு, குப்தா ஆறு, ஆந்திர மாநிலம் ஓ.என்.கொத்தூர் ஏரி, வேப்பனஹள்ளியை...