ஓசூர் காமாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ஓசூர், ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில், கல்யாண காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருஷாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 16வது ஆண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது. இதில் முதலில் குழந்தைகள் சங்கல்பங்கள் செய்தனர்....
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, ஜூலை 5: கிருஷ்ணகிரியில், போதைபொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த...
குட்கா கடத்தியவர் கைது
ஓசூர், ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை மாஸ்தி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் சந்தேகப்படும்படி சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் பேரிகை அடுத்த மிடுதேப்பள்ளியை சேர்ந்த வெங்கடேசப்பா (50) என்பது தெரிந்தது. இதையடுத்து...
இளம்பெண் கடத்தல்
கிருஷ்ணகிரி, ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அலேகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரோஜா (29). இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, ரோஜா கோபித்துக்கொண்டு நேரலகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி...
அரசு தொடக்க பள்ளியில் டிஆர்ஓ ஆய்வு
போச்சம்பள்ளி, ஜூலை 4: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் டிஆர்ஓ சாதனைகுறள், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மெனுவின்படி வழங்கப்பட்ட பொங்கல், பருப்பு சாம்பார் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதே போல், உணவு பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள், காய்கறிகள் முறையாக...
ஜல்லிக்கற்கள் கடத்திய லாரி டிரைவர் கைது
ஊத்தங்கரை, ஜூலை 4: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கொண்டிரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் அதிகாரிகள், மத்தூர் ஊத்தங்கரை செல்லும் பகுதியில், கொடமாண்டப்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து...
ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
போச்சம்பள்ளி, ஜூலை 4: போச்சம்பள்ளி தாசில்தார் சத்யாவிற்கு, ஜல்லிகற்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளுடன் வாகன தணிக்ைக மேற்கொண்டார். அப்போது கொடமாண்டப்படி கூட்ரோடு பகுதியில் டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு 2 பேர் தப்பியோடினர். பின்னர் லாரியை தாசில்தார் சோதனையிட்டார். அதில்,...
ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம்
காவேரிப்பட்டணம், ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி, சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காவேரிபட்டணம் மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி சட்டமன்றத்...
இளம்பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரி, ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போதசந்திரம் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர்...