மாரியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா
ராயக்கோட்டை, ஆக.6: ராயக்கோட்டை தோட்டம், சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோயிலில் 11ம் ஆண்டு குண்டம் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 1ம்தேதி கங்கனம் கட்டும் நிகழ்ச்சியும், 3ம்தேதி சக்தி அழைத்தல், 4ம்தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச பூஜை, ஹோமம் நடைபெற்றது. நேற்று கோயில் முன்பாக அக்னி குண்டம் அமைத்து, அதற்கு சிறப்பு பூஜைகள்...
என்.ஹெச்.,ல் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை
ஓசூர், ஆக.6: தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியில் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில் வட்டார போக்கு வரத்து அலுவலகம், காவல் துறை சோதனை சாவடி உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இங்கு தேசிய...
டூவீலரில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி
கிருஷ்ணகிரி, ஆக.5: திருவண்ணாமலை மாவட்டம், பசும்போரை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (61). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மல்லேப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி கெலமங்கலம் சாலை, மல்லேப்பாளையம் பகுதியில் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி...
பராமரிப்பின்றி காணப்படும் ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட்
ராயக்கோட்டை, ஆக.5: ராயக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் கடந்த 2011ம் ஆண்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மழைக்காலங்களில் நீர் செல்ல வழியில்லாததால் பஸ்...
சீதோஷ்ண மாற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரியில் நேற்று காலை வழக்கத்தை விட சீதோஷ்ண நிலை மாறி இருந்தது. இதமான வெயிலும், லேசான சாரல் மழை துறியது. அதிகாலையில் பனியின் தாக்கம் காணப்பட்டது. வழக்கமாக 9 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று முதல் மாலை வரை இதமான சூழல் தென்பட்டது. பொதுமக்கள் பலரும் சாரல் மழையில்...
போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
போச்சம்பள்ளி, ஆக.4: போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று ஆடி 18ஐ முன்னிட்டு வாரச்சந்தை நடந்தது. அதிகாலையில் கால்நடை, அதை தொடர்ந்து தானியங்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் சந்தை இரவு வரை நடைபெறும். ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று காலை கூடியது...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கும் இடங்கள்
கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், 5ம் தேதி (நாளை) ஓசூர் மாநகராட்சியில் வார்டு எண்.4,5,6 ஆகிய பகுதிகளுக்கு ஓசூர்...
ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
கிருஷ்ணகிரி, ஆக. 4: கிருஷ்ணகிரி அணையில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், ஆயிரக்கணக்கானோர் குவிந்து புனித நீராடி மகிழ்ந்தனர். புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள...
தென்பெண்ணையில் பெண் சடலம் மீட்பு
கிருஷ்ணகிரி, ஆக.3: உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே போடூர் தென்பெண்ணையாற்றில் நேற்று 50வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்...