பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி
கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்...
துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா
ராயக்கோட்டை, ஆக.2: ராயக்கோட்டை துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள துர்க்கை மாரியம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வருடமும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கங்கனம் கட்டுதலும், சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து...
மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
போச்சம்பள்ளி, ஆக. 1: காவேரிப்பட்டணம் ஒன்றியம், சுண்டகாப்பட்டி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களை மேளதாளங்கள் முழங்க எடுத்துச்சென்று, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்....
தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா
ஊத்தங்கரை, ஆக.1: ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடையே தமிழ் உணர்வை வெளிக்கொண்டு வரும் வகையில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வடிவங்களில்...
18 கிலோ குட்கா கடத்திய முதியவர் கைது
கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி டவுன் எஸ்எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் குட்கா பொருட்கள் வைத்திருப்பது தெரிந்தது. தொடர்...
கிருஷ்ணகிரியில் சிறுமி கடத்தல்
கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தாள். கடந்த 5ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றாள். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவளை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார்...
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
தேன்கனிக்கோட்டை, ஜூலை 30: தளி அருகே உள்ள கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் கும்ளாபுரத்தில் உள்ள கவுரம்மா கோயில் வளாகத்தில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா முன்னிலை வகித்தார். விழாவில் 30...
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை காவல் நிலைய எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பி.சி.புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரண்டு வாலிபர்களிடம் சோதனை செய்தனர். அவர்களிடம் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 600 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர்கள்...
கம்பு விளைச்சல் அதிகரிப்பு
ராயக்கோட்டை, ஜூலை 29: ராயக்கோட்டையில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் விவசாயிகள் மலர்களுக்கு அடுத்தபடியாக கம்பு, சோளம் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். நெல் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியில் வருவாய் ஈட்டி வந்த நிலையில், தற்போது கம்பு அதிகளவில் விளைக்கப்படுகிறது. பெரும்பாலும் சோளப்பயிர்களை...