வாலிபரின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 29: கிருஷ்ணகிரியில், முன்விரோத தகராறில் வாலிபரின் வீட்டின் முன், கதவில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த லண்டன்பேட்டை நாயுடு தெருவை சேர்ந்தவர் ஜெய்அரவிந்த் (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாபா உசேன் தெருவை சேர்ந்த இம்ரான் (34), தன்வீர் (19) ஆகியோருக்கும் இடையே...
விபத்துகளை தடுக்க வேகத்தடை அவசியம்
போச்சம்பள்ளி, ஜூலை 28: போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கௌதம் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: போச்சம்பள்ளியில் போதிய சாலை கட்டமைப்புகள் இன்றி காணப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, போச்சம்பள்ளியில் இருந்து சிப்காட் வரை சாலை...
தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
போச்சம்பள்ளி, ஜூலை 28: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமகவுண்டனூர் கிராமத்தில், 7 ஆண்டுக்கு முன் ரேஷன் கடை இருந்தது. இக்கடை சிதிலமடைந்ததால், அதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தினர். மீண்டும் அதே இடத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், புதியதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி, நேற்று முன்தினம் தொடங்கியது....
நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாதங்களில் தொடங்குமா?
கிருஷ்ணகிரி, ஜூலை 28: ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழக -கர்நாடக மாநில எல்லையில் உள்ள நகரமாகும். குண்டூசி முதல் விமானம் தயாரிக்க கூடிய நிறுவனம் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இருசக்கர, 4 சக்கர...
யானை மீது சந்தனக்குட ஊர்வலம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: தேன்கனிக்கோட்டை உருஸ் விழாவையொட்டி, யானை மீது சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா 76வது உருஸ் விழாவை முன்னிட்டு, யானை மீது சந்தனக்குட ஊர்வலம் நடைபெற்றது. முத்தவல்லி முஜாமில்பாஷா, செயலாளர் மகபூப்கான் ஆகியோர் முன்னிலையில், முதல்நாள் தர்காவில் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு யானை...
3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால் சாலை மறியல் போராட்டம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: தேன்கனிக்கோட்டையில் அடிதடி வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், அதிருப்தியடைந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 23ம் தேதி மாரியம்மன் கோயில் விழா நடைபெற்றது. அப்போது, தேன்கனிக்கோட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பருக்கும், பழையூரைச் சேர்ந்த அம்ரீஸ் (25), அஜய்...
மின் மோட்டார் ஒயரை திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி, ஜூலை 26: பர்கூர் அருகே மின் மோட்டார் ஒயரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பர்கூர் அருகே மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயியான இவர், நேற்று வழக்கம்போல் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கிணற்றில் இருந்து ஒரு வாலிபர், மின் மோட்டார் ஒயரை திருட முயற்சி செய்து...
தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா
கிருஷ்ணகிரி, ஜூலை 25: சிப்காட்டுக்கு நிலம் வழங்க மறுத்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட் 5 அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி கடந்த 2016 முதல் நடந்து வருகிறது. அந்த நிலங்களுக்கு...
கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார், தீர்த்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் அவர் பேரிகை பகுதியை சேர்ந்த வெங்கைய்யா (65) என்பது தெரியவந்தது. அவரை...