தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா
கிருஷ்ணகிரி, ஜூலை 25: சிப்காட்டுக்கு நிலம் வழங்க மறுத்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட் 5 அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி கடந்த 2016 முதல் நடந்து வருகிறது. அந்த நிலங்களுக்கு...
கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார், தீர்த்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் அவர் பேரிகை பகுதியை சேர்ந்த வெங்கைய்யா (65) என்பது தெரியவந்தது. அவரை...
குந்தாரப்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் 3 ஆண்டுகளில் 2153.97 டன் விளைபொருட்கள் கையாண்டு சாதனை
கிருஷ்ணகிரி, ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.5.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பதப்படுத்தும் நிலையத்தில் 3 ஆண்டுகளில் 2153.97 டன் விளைபொருட்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டமானது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு உகந்த சீதோஷ்ண நிலை உள்ள பகுதியாகும். இம்மாவட்டத்தில்...
கருங்கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூலை 24: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள நல்லகானகொத்தப்பள்ளி விஏஓ கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர். அப்போது கேட்பாரற்று நின்ற டிராக்டரில் சோதனை செய்தனர். அதில், ரூ.2500 மதிப்பிலான ஒரு யூனிட் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதயைடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, சூளகிரி...
ஓசூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
ஓசூர், ஜூலை 24: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஓசூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஓசூரில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது...
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்ற 189 பேருக்கு அரசு பணி
கிருஷ்ணகிரி, ஜூலை 24: கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்ற 189 பேர் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்துடன்...
சாலையோர பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலையோர பள்ளத்தில், டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். சென்னையில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த டிரைவர்...
மத்திய நாற்றங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு உயர்ரக மரக்கன்றுகள்
கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், போலுப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம் என சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம் மையம், மத்திய நாற்றங்கால் பண்ணை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கம் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து,...
பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 22: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு யாக வேள்வி...