மத்திய நாற்றங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு உயர்ரக மரக்கன்றுகள்
கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், போலுப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகளை இலவசமாக பெறலாம் என சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம் மையம், மத்திய நாற்றங்கால் பண்ணை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கம் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து,...
பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 22: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் 11ம் ஆண்டு ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு யாக வேள்வி...
ஓசூரில் டூவீலரில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
ஓசூர், ஜூலை 22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து டூவீலரில் வந்த 2 வாலிபர்களை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர்கள் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விகாரணையில், அவர்கள்...
ஓரணியில் தமிழ்நாடு துண்டு பிரசுரம் விநியோகம்
ஓசூர், ஜூலை 22: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவாயில் முன்பு, திமுக மாணவரணி சார்பில் பிரசாரம் நடந்தது. மாணவரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ்...
கிருஷ்ணகிரியில் 30 நாட்கள் நடந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவடைந்தது
கிருஷ்ணகிரி, ஜூலை 22: கிருஷ்ணகிரியில் 30 நாட்களாக நடந்த 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இக்கண்காட்சியை 2.23 லட்சம் பேர் கண்டுகளித்ததாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, கடந்த மாதம் 21ம் தேதி, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர்...
அனுமதியின்றி மண் எடுத்த லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூலை 21: கந்திகுப்பம் அருகே உளள பாலிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முத்தம்மாள் மற்றும் அலுவலர்கள், கந்திகுப்பம் தனியார் கல்லூரி அருகில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மண் இருந்ததும், அந்த மண் ராசிப்பள்ளி ஏரியில் இருந்து...
டூவீலர் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிப்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 21: கிருஷ்ணகிரி நகரில், விதிகளை மீறி டூவீலர் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி நகரில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கி, அதிக அளவில் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சமீப காலங்களில் சிறுவர்கள் வாகனங்களை இயக்கியதில், விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில்,...
பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
போச்சம்பள்ளி, ஜூலை 21: பாரூர் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடத்தை கடந்து நெடுங்கல் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து கால்வாய்...
கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 20: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுதமி(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரமேஷிற்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரமேஷின் பெற்றோர், அவரை கண்டித்து உள்ளனர். இந்நிலையில்...