மா மரங்களில் “கல்தார்” உபயோகிப்பதை தடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி, ஜூலை 19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மா மரங்களில் “கல்தார்” உபயோகிப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில், கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வேளாண்மை...
ஜவுளி கடை ஊழியர் மாயம்
கிருஷ்ணகிரி, ஜூலை 18: வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளியை சேர்ந்தவர் கீரப்பா(24). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கீரப்பா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் நரசம்மா, வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த...
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணை பகுதியில் 20 மிமீ., மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது....
2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி
கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில், 2 லட்சம் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக 2...
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2(ஏ) முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், வருகிற 21ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம்...
கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு
போச்சம்பள்ளி, ஜூலை 17: போச்சம்பள்ளி, மத்தூர், வேலம்பட்டி, சத்தம்பட்டி, காவேரிப்பட்டணம், குள்ளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலர்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் குண்டுமல்லிக்கு பெங்களூரு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மல்லிகை பூவை பொறுத்து வரையில் மழை மற்றும் பனி காலங்களில், விளைச்சல் அதிகமாக காணப்படும். கோடை காலங்களில்...
முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 17: கிருஷ்ணகிரி அணையில் இருந்து, 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை, கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். கிருஷ்ணகிரி அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில், 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு, முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை,...
நிலத்தகராறில் மோதல்: 8 பேர் மீது வழக்கு
போச்சம்பள்ளி, ஜூலை 16: மத்தூர் அருகில் உள்ள களர்பதி கலைஞர் நகரை சேர்ந்தவர்கள் ஜமீன்தார் மற்றும் காசிம். உறவினர்களான இவர்களுக்கு இடையே, நீண்ட காலமாக நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த தகராறில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டை, கல்லால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். காயமடைந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள், மத்தூர் மற்றும்...
பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ள நடவடிக்கை
கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக உணவுத்துறை அமைச்சர் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய...