கரூர் மாவட்டத்தில் நாளை குரூப்-4 போட்டி தேர்வினை 18,030 பேர் எழுதுகின்றனர்
கரூர், ஜூலை 11: கரூர் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை 65 மையங்களில் 18,030 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வெழுத உள்ளதாகவும், தேர்வர்களுக்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்வரும் 12.7.2025 அன்று முற்பகல் மட்டும் நடத்தப்படும் ஒருங்கிணைந்த...
தாந்தோணிமலையில் பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார மாதிரி பூங்கா
கரூர், ஜூலை 11: தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே பராமரிப்பின்றி உள்ள சுகாதார மாதிரி பூங்கா வளாகத்தை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது....
குடும்பத் தகராறில் தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கரூர், ஜூலை 10: கரூர் பசுபதிபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் ராமானூரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(41). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை விட்டு தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன விரக்தியுடன் இருந்து வந்தவர், கடந்த...
அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற கோரிக்கை
கரூர், ஜூலை 9: கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகர் வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆறு திருமுக்கூடலூர் வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் இந்த அமராவதி ஆற்றில் அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக...
கிருஷ்ணராயபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநிநேயம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 10:கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான படிவங்கள் மற்றும் நோட்டீஸ்களை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் செல்வராணி,...
தாந்தோணிமலையில் முழுநேரம் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்
கரூர், ஜூலை 9:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகரை ஒட்டி வடக்குத்தெருவில் கடந்த 2014&15ம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரு. 10லட்சம் மதிப்பில் நவீன சமூதாய கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியினர்...
குளித்தலை - மணப்பாறை செல்லும் ரயில்வே கேட் சாலை பள்ளம் சீரமைப்பு
குளித்தலை, ஜூலை 8: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக சென்னை பெரம்பலூர் துறையூர் முசிறி நாமக்கல் சேலம் மற்றும் கரூர் திருச்சி உள்ளிட்ட மார்க்கத்திலிருந்து திண்டுக்கல் மதுரை பழனி கொடைக்கானல் தேனி கம்பம் போடி செல்ல வேண்டுமென்றால் இந்த...
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி முதியவர் பலி
கிருஷ்ணராயபுரம், ஜூலை 9: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூரில் சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் தேவாலய கூடலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவர் தனது தம்பியுடன் அவரது குலதெய்வமான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாரியம்மன்...
கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ரிக்ஷா இயக்க அனுமதி அளிக்க வேண்டும்
கரூர், ஜூலை 8: திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் ஸ்டாண்ட் அமைத்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை...