சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
கரூர், ஜூலை 17: கரூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1...
கரூர் மாநகரில் மேம்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிற்கும் கனரக வாகனங்களால் இடையூறு
கரூர், ஜூலை 17: வெங்கமேடு சர்வீஸ் சாலையோரம் நீண்ட நேரம் வாகன நிறுத்தம் செய்யப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரைச் சுற்றிலும் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதில், திருக்காம்புலியூர் மற்றும் வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில்...
நொய்யல் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
க.பரமத்தி, ஜூலை17: நொய்யல் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். அப்போது தொடர்ந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுபதாக கூறினர். கரூர் மாவட்டம், புகழூர் வட்டம் க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆத்துப்பாளையம் அணை என்றழைக்கப்படும் நொய்யல் நீர்த்தேக்கம்...
வெற்றிலைக்கு இயற்கை உரம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
தோகைமலை, ஜுலை 16: தோகைமலை அருகே ஆர்.டி.மலை மலைக்கோவிலில் நடந்த மஹா சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹா சங்கடஹர...
கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
கரூர், ஜூலை. 16: கரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பார் செயல்படும் பகுதியை ஒட்டி கஞ்சா விற்பனை செய்ததாக திருநெல்வேலியை சேர்ந்தவர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். ...
கரூர் மாநகராட்சியில் ரூ.800 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒப்புதல்; உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செந்தில்பாலாஜி பேச்சு
கரூர், ஜூலை 16: கரூர் மாநகராட்சியில் ரூ. 800 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக உங்களிடன் திட்ட முகாமில் செந்தில் பாலாஜி கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கிவைத்ததை தொடர்ந்து கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தோகைமலை பகுதியில் மது விற்ற 3 பெண்கள் கைது
தோகைமலை: தோகைமலை பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 3 பெண்களை போ லீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தோகைமலை காவல்சரகம் கொசூர் ஊராட்சி கம்பளியாம்பட்டி பழனியப்பன் மனைவி ராசம்மாள் (60). இவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல் பேரூர்...
கரூர் மேற்கு ஒன்றிய பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற புதிய பணிகள் தொடக்க விழா
வேலாயுதம்பாளையம், ஜூலை 15: கரூர் மேற்கு ஒன்றிய ஒன்றிய பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் நிறைவுபெற்ற, பணி தொடக்க விழா எம் எல் ஏ இளங்கோ தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் கரூர் மேற்கு ஒன்றிய பகுதியில் நிறைவு பெற்ற மற்றும் புதிதாக பணி...
மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்; ரூ.5.43 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
கரூர்: கரூர் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள்...