செல்லாண்டிபாளையத்தில் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
கரூர், செப்.15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் மிதக்கிறது.இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாய்க்கால் பகுதியில் பரவியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்...
கடவூர் அருகே மதுபானங்கள் பதுக்கி விற்றவர் கைது
கடவூர், செப். 15: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே மதுபானம் விற்பனை செய்வதாக பாலவிடுதி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்....
சுக்காலியூர் ரவுண்டானாவில் பிரிவு சாலையோரம் சேறும் சகதியில் சறுக்கும் வாகனங்கள்
கரூர், செப்.15: சுக்காலியூர் ரவுண்டானாவில் இருந்து அரவக்குறிச்சி பிரிவு சாலையின் வளைவில் சேறும் சகதியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் மேம்பாலத்தை ஒட்டி, திண்டுக்கல், மதுரை மற்றும் அரவக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு மேம்பாலம் செல்லும் சர்வீஸ் சாலை...
கரூர்-ராயனூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கரூர், செப். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் சாலையில் கனரக வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூர் மாநகர பகுதிகளில் இருந்து ராயனூர், திண்டுக்கல், திருச்சி மற்றும் மதுரை பைபாஸ் சாலைகள், கோடங்கிப்பட்டி, ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர், ராயனூர்...
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கல்
கரூர், செப். 13: கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டது. ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வண்ண மற்றும் வெண்மை நிற சீருடைகள் வழங்கப்பட்டன. மேலும், இரண்டு ஸ்மார்ட் போர்டு நமக்கு நாமே...
மார்க்.கம்யூ. நிர்வாகிகள் உடல் தானம்
கரூர், செப். 13: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 10 பேர் நேற்று உடல்தானம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஜோதிபாசு, தண்டபாணி,...
சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் அரசு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கரூர், செப். 12: மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. முன்னதாக சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக புதுமை இயக்குனர் டாக்டர் சசிபிரபா வரவேற்றார். அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நடேசன் சிறப்புரை ஆற்றினார்....
அரவக்குறிச்சி அருகே பழுதடைந்த மின் கம்பம் சீரமைப்பு
அரவக்குறிச்சி, செப். 12: அரவக்குறிச்சி வேலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கராஜ் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த மின்கம்பம் மிகவும் பழுதடைந்திருந்தது. மின் கம்பத்தின் நடுப்பகுதியில் சிமென்ட் தளம் பெயர்ந்து, வெறும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன. அந்த மின் கம்பம் எந்த நேரத்தில் உடைந்து விழுந்து அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலேயே அந்தப்பகுதி...
அரவக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அரவக்குறிச்சி, செப். 12: அரவக்குறிச்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சிய தங்கவேல் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி வட்டாரத்தில், லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு லிங்கம நாயக்கன்பட்டி பிக் பாஸ் மஹால், மண்மாரி புதுாரிலும், தோகைமலை வட்டாரத்தில், கல்லடை மற்றும் புத்துார் ஆகிய ஊராட்சிகளுக்கு கீழவெளியூர் சமுதாயக்கூடத்திலும், தாந்தோணி வட்டாரத்தில், மணவாடி ஊராட்சிக்கு...