க.பரமத்தி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
க.பரமத்தி, ஜூலை 23: க.பரமத்தி ஒன்றிய சிவன் கோயில்களில் பிரதோஷ விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியத்தில் முன்னூரில் மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், க.பரமத்தி சௌந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந்திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம்...
அங்கன்வாடி ஒய்வூதியர்கள் ஒப்பாரி போராட்டம்
கரூர், ஜூலை 23: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் சரஸ்வதி வரவேற்றார். சுப்புலட்சுமி, அன்புமணி உட்பட பலர்...
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 11,268 மனுக்கள் வருகை
கரூர், ஜூலை 23: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 11,268 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார், கரூர் மாநகராட்சி மற்றும் மண்மங்கலம் வட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்தில்...
வெள்ளியணை, மாயனூர் பகுதியில் கடைகளில் குட்கா பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் மீது வழக்கு
கரூர், ஜூலை 22: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை, மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்...
ஆள் கடத்தல், கூட்டுகொள்ளையில் ஈடுபட்ட குமரியை சேர்ந்த 8 பேர் கைது
கரூர், ஜூலை 22: கரூரில் ஆள் கடத்தல் மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் பழனிச்சாமி (78) என்பவர் சொந்தமாக பால் பண்ணை நடத்தி வந்தார். கடந்த பிப்ரவரி 21ம்தேதி காலை 5 மணியளவில், பழனிச்சாமி பால் பண்ணையை திறக்க வந்த போது...
ஆக. 27ம் தேதி சதுர்த்தி விழா விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி
குளித்தலை, ஜூலை 21: ஆக. 27ம் தேதி சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு விநாயகர் சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். தமிழகத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது. நகர்ப்புறம் கிராமப்புறங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்பினர் பல்வேறு வகை...
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அரசு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும்: ஆண்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம்
கரூர், ஜூலை 21: கரூரில் நடைபெற்ற கரூர் மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் 14வது ஆண்டு பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். பேரவை கூட்டத்தை மாவட்ட செயலாளர் முருகேசன் துவக்கி வைத்து...
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
கரூர், ஜூலை 21: ஆடி கிருத்திகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை நாளை அனைத்து தரப்பு மக்களும் விசேஷ...
காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; களப்பணியாளர்களுக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்
கரூர் ஜூலை 20: தமிழக அரசு காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமென அரசு ஊழியர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 2வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு மாநில...