கரூர் பூ மார்க்கெட் சாலையில் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்
கரூர், செப். 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பூ மார்க்கெட் செல்லும் சாலையில் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய்களைபரப்புப்கிறது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை வழியாக கரூரில் இருந்து வாங்கல், ஐந்து ரோடு, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுககு செல்லும் அனைத்து வாகனங்களும் பூ மார்க்கெட் வழியாக செல்கிறது. இந்த பகுதியின் வழியாக குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும்...
கரூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்
கரூர், செப்.25: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமபொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் துய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -2 என்ற திட்டம் தொடர்பாக நாளை (26.9.2025)...
பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை
அரவக்குறிச்சி, செப். 24: தினகரன் நாளிதழில் எதிரொலியாக புத்தாம்பூர் ஜவுளி பூங்கா பஸ் நிறுத்தத்தில் புதியதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு ஆயிரக்கணக் கானோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரூருக்கு தினமும்...
கிருஷ்ணராயபுரத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடைகள்
கிருஷ்ணராயபுரம், செப். 24: கிருஷ்ணராயபுரம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய திட்டப் பணி மற்றும் புதிய பகுதிநேர நியாய விலை கடைகளை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் திறந்துவைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி தேசியமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-26ம் ஆண்டு குளித்தலை...
திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் கபடி போட்டி: கரூர் கொங்கு கல்லூரி வீரர்கள் முதல் பரிசு
கரூர், செப். 24: திருச்சி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டி வெற்றி பெற்ற கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வீரர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் வி செந்தில் பாலாஜி எம் எல் ஏ பரிசு வழங்கினார்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி...
புரட்டாசி சனி கல்யாண வெங்கடரமண சுவாமி பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர், செப்.21: கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சி தான்தோன்றி மலையில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது.பல நூற்றாண்டு பழமை வாய்ந்த குடைவரை கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி...
புரட்டாசி, மகாளய அமாவாசை மீன், சிக்கன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது
கரூர், செப். 22: புரட்டாசி மாதம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கரூர் மாநகர பகுதிகளில் நேற்று மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.புரட்டமாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இந்துக்கள் விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஒரு மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை...
குளித்தலை அருகே மது விற்றவர் கைது
குளித்தலை, செப்.21: குளித்தலை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (68). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை சப்இன்ஸ்பெக்டர் சரவணகிரி மற்றும்...
வயிற்றுவலியால் அவதி சாணப்பொடியை கரைத்துகுடித்து பெண் தற்கொலை
அரவக்குறிச்சி, செப்.19: அரவக்குறிச்சி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் சாணப்பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மனைவி முத்துலட்சுமி (50). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த...