புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலாயுதம்பாளையம். ஜூலை. 30: கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் சுகாதாரத்துறை நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் டாக்டர் இலக்கியா தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதாரத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமுகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள்,...
கவனத்தை சிதைக்கும் தடுப்புச்சுவர் நோட்டீஸ்கள்
கரூர், ஜூலை. 29: வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தடுப்புச் சுவர்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சுங்ககேட் தாந்தோணிமலை, காந்திகிராமம், சுக்காலியூர் ஆகிய முக்கிய சாலைகளின் மையத்தில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு...
கடைகளில் குட்கா விற்ற 3 பேர் கைது
கரூர், ஜூலை 29: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த...
கரூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று தரவுகள் சேகரிக்கும் மடிக்கணினிகள்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
கரூர், ஜூலை. 29: கருர் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வீடு வீடாகச்சென்று தரவுகள் சேகரி க்கும் மடிக்கணினிகளை கலெ க்டர் வழங்கினார். மேலும்பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும்...
ஜல்லி கற்கள், செங்கல் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை தேவை
கரூர், ஜூலை 28: வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் வகையில் கரூர் மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் சரக்கு வாகனங்கள் செல்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அதிகளவு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான...
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு தேவை
க.பரமத்தி, ஜூலை 28: சின்னதாராபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னதாராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகள் சின்னதாராபுரம் தென்னலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது....
பெட்டிக்கடை, டீக்கடைகளில் 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
கரூர், ஜூலை 28: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில...
குளித்தலை அருகே நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
குளித்தலை, ஜூலை 26:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆதி நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுதலைவர் பிரியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளரும், வார்டு உறுப்பினருமான மகேந்திர ராஜ், ஆதிநத்தம் வார்டு உறுப்பினர் தீபா, பள்ளி பெற்றோர் ஆசிரியர்...
ஜூலை 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர், ஜூலை. 26: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூலை 28ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்...