கரூர், தாந்தோணி வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், ஆக. 1: கரூர் தாந்தோணி வட்டாரம் உள்ளிட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய...
கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு
வேலாயுதம்பாளையம், ஆக 1: கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வேகேட் அருகே புதுக்குறுக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுகி (27). இவர், கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாசுகி ரேசன் கடையில் இருந்த போது கரைப்பாளையம் பூலாங்காலனி...
புலியூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடவூர், ஜூலை 31: புலியூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஊத்துக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36), கூலித்தொழிலாளி. கடந்த 24ம் தேதி கோவிந்தராஜ் கடவூர் அருகே தரகம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் மீண்டும்...
குளித்தலை காவிரி பாலத்தில் பைக் மீது கார் மோதி பெண் படுகாயம்
குளித்தலை, ஜூலை 31: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (26). இவரின் தந்தை சுப்பிரமணியன், தாயார் உஷாராணி ஆகிய இருவரும் பைக்கில் நேற்று முன்தினம் குளித்தலை காவிரி பாலத்தில் சென்றனர். அப்போது எதிரே குளித்தலை பெரியார் நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த கார் பைக்...
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கரூர், ஜூலை 31: கரூரில் நடந்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சத்தியமூர்த்தி...
வெள்ளியணை அருகே தனியார் பஞ்சுமில்லில் திடீர் தீ
கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள செயல்பட்டு வரும் தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள வால்காட்டு புது£ரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு உற்பத்தி மில் செயல்படுகிறது. இந்த மில்லில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் நேற்று காலை பணியாளர்கள்...
வாங்கல், குப்புச்சிபாளை பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறது
கரூர், ஜூலை 30: உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாங்கல், குப்புச்சிபாளையம் ஊராட்சிகளில் இன்று நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வட்டாரத்தில், வாங்கல், குப்புச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு வாங்கலம்மன் திருமண மண்டபத்திலும், தாந்தோணி வட்டாரத்தில், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு ஆண்டாங்கோவில் புதுார் PSR திருமண...
புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலாயுதம்பாளையம். ஜூலை. 30: கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் சுகாதாரத்துறை நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் டாக்டர் இலக்கியா தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதாரத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமுகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள்,...
கவனத்தை சிதைக்கும் தடுப்புச்சுவர் நோட்டீஸ்கள்
கரூர், ஜூலை. 29: வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தடுப்புச் சுவர்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சுங்ககேட் தாந்தோணிமலை, காந்திகிராமம், சுக்காலியூர் ஆகிய முக்கிய சாலைகளின் மையத்தில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு...