அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவன் மாநில அளவிலான சாகச பயிற்சியில் சாதனை

கரூர், ஆக. 26: மாநில அளவிலான நடைபெற்ற சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவன் தேர்வு செய்யப்படார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம், 2ம் ஆண்டு படித்து வரும் அஜய்குமார் என்ற மாணவர் சாகச பயிற்சியில் மாநில...

கரூர் ராயனூர் அருகே நினைவுச் சின்ன ஸ்தூபி ஆக்கிரமிப்பு

By Ranjith
26 Aug 2025

கரூர், ஆக. 27: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவுச் சின்ன ஸ்தூபியை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில் இந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழுதடைந்த...

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By Ranjith
26 Aug 2025

கரூர், ஆக. 27: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்ட த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும்...

கிருஷ்ணராயபுரம் அருகே புதிய பாலப்பணியை விரைந்து முடிக்கவேண்டும்

By Ranjith
21 Aug 2025

கிருஷ்ணராயபுரம், ஆக. 22: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி லாலாபேட்டை பகுதியில் கள்ளபள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இவ்வழியாக மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஊருக்கு...

க.பரமத்தி அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற 2 பேர் கைது

By Ranjith
21 Aug 2025

க.பரமத்தி, ஆக. 22: க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் அரசு மதுபானக்கடை வெளி மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரவி மகன் முருகானந்தம் (29) இதே ஊரை சேர்ந்த மதி மகன் சதீஸ்குமார்(29) விற்பனைக்காக வைத்திருந்த 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். க.பரமத்தி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.   ...

பழைய ஜெயங்கொண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

By Ranjith
21 Aug 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் இன்று நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சியில் வார்டு எண் 8,9,10,11,12,13,14,15-ற்க்கு பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் சமுதாய கூடத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில்,...

க.பரமத்தியில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள்

By Ranjith
21 Aug 2025

க.பரமத்தி, ஆக. 21: பட்டியலின விடுதலைப் பேரவை சார்பில் ஒண்டிவீரன் 255வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. க.பரமத்தி கடைவீதியில் பட்டியலின விடுதலைப் பேரவை சார்பில் இந்தியாவின் முதல் விடுதலைப் போராளி மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களது 255வது நினைவு நாளில் அவரது படம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டியலின விடுதலைப்...

சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்

By Ranjith
21 Aug 2025

கரூர், ஆக. 21: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படுவது தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளின் சாலையோரத்தில் கொட்டி பின்னர் எரிக்கப்பட்டு வருகிறது....

திருக்காம்புலியூர் அருகே குட்கா விற்றவர் கைது

By Ranjith
21 Aug 2025

கரூர், ஆக. 21: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா விற்பனை செய்வது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு...

பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க வேண்டும்

By Ranjith
19 Aug 2025

க.பரமத்தி,ஆக. 20: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது. செயலாளர் அன்புராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி மாவட்ட குழு முடிவுகள் கூறித்து பேசினார். உறுப்பினர்கள் ரவி, சௌந்தரராஜன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஊராட்சி காவேரி நகர் முதல் தெருவில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்....