தக்கலை அருகே நாற்காலி துவாரத்தில் சிக்கிய குழந்தை கால் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
தக்கலை, அக்.28: தக்கலை அருகே உள்ள குழிக்கோடு அம்மாண்டிவிளை பகுதியில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நாற்காலியில் கால்கள் குழாய் வடிவத்தில் அமைந்துள்ளது. நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வலது கால் திடீரென அந்த குழாயில் புகுந்தது. பின்னர் அதனை எடுக்க முடியாமல் குழந்தை...
தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு விடைக்குறியீடு வெளியீடு
நாகர்கோவில், அக்.26: அரசு தேர்வுகள் இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ம் தேதி அன்று நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க...
ரோகிணி ெபாறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
அஞ்சுகிராமம், அக்.26: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழா கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன் தலைமையில் நடந்தது. கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொறுப்பு டிஎஸ்பி...
திருச்சூர் அருகே டீக்கடையில் வியாபாரியிடம் ரூ.75 லட்சம் பறிப்பு காரில் தப்பிய கும்பலுக்கு வலை
திருவனந்தபுரம், அக். 26: மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சூர் அருகே மண்ணுத்தி பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கினார். அவர் தன்னுடைய பேக்கில்...
லாட்டரி விற்றவர் கைது
மார்த்தாண்டம், அக். 25: களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகிந்த் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மார்க்கெட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த எட்வின் ஜோகன் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50...
பஸ்சில் இருந்து இறங்கிய போது ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
குளச்சல், அக். 25: சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முச்சந்தி (80). இவர் நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு காட்டுவிளையில் உள்ள கோயிலுக்கு பஸ்சில் சென்றார். ஈத்தங்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து முச்சந்தி இறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முச்சந்தியை...
கருங்கல் அருகே சாலையில் சாய்ந்த மரம்
கருங்கல், அக்.25 : கருங்கலில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் பாலூர் பகுதியில் நின்ற பெரிய புளிய மரம் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தின் பெரிய கிளைகள் உயர் அழுத்த மின்பாதையில் உள்ள மின் கம்பிகள்...
நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
நாகர்கோவில், அக். 24: நாகர் கோவிலில் அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார். நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் முன்புள்ள சாலையோரம் 2 பேர் குடிபோதையில் நேற்று முன்தினம் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், நடந்து சென்றவர்களில் ஒருவர்...
அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு
அஞ்சுகிராமம், அக். 24: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அமைந்துள்ள மேற்கு பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்வார்கள். அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், அன்னை வேளாங்கண்ணி நற்பணி மன்றத்தின் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதன்...