தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
குமாரபுரம், ஆக. 7: தக்கலை அருகே முளகுமூட்டில் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ. இம்மானுவேல் அங்கு சென்ற போது சந்தேகப்படும்படி நின்ற 3 வாலிபர்களை பிடித்து சோதனையிட்டார். அப்போது அவர்களிடம் தலா 3 கிராம் வீதம் 3 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது....
சுருளக்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
குலசேகரம், ஆக. 7: சுருளக்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சுருளக்கோடு புனித அந்தோனியார் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருவட்டார் வட்டாட்சியர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் செந்தூர்ராஜன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில்...
குழித்துறை அருகே மீனவர் தூக்குப்போட்டு சாவு
மார்த்தாண்டம், ஆக.6: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மூதாக்கரை மீனவர் காலனியை சேர்ந்தவர் சேவியர் (64). மீன்பிடி தொழிலாளி. இவர் குழித்துறை அடுத்த பழவார் பனவிளை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவருக்கு வாதம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சேவியர் வீட்டின் அருகில்...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம், ஆக. 6: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ சார்பில் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழித்துறை அரசு மருத்துவமனை வெட்டுவெந்நியில் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் மற்றும் கழிப்பிடக் கழிவுநீர் வடிகால் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாஜ சார்பில் தொடர்...
ஊரம்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நித்திரவிளை, ஆக. 6 : முஞ்சிறை மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் ஊரம்பு பகுதியில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. முஞ்சிறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரின்ஸ் தலைமை வகித்தார். முஞ்சிறை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விஜில் சிங், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசந்திர பூபதி ஆகியோர்...
புதுக்கடையில் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
புதுக்கடை, ஆக. 5: கன்னியாகுமரி மாவட்ட பாரதீய விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் முஞ்சிறை ஒன்றிய பிஎம்எஸ் அலுவலகத்தில் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் அருள்கணபதி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் தர்மராஜ் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், சுபின் மற்றும் சிறப்பு...
எஸ்பியிடம் புகார் தெரிவித்த பெண்ணை தாக்கிய அரசு ஆசிரியர் மீது வழக்கு
நாகர்கோவில், ஆக. 5: திருவட்டார் அருகே உள்ள களத்துநடையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி வசந்தா(48). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். விஜயனின் தந்தையின் சகோதரர் மாணிக்கம்(82), விஜயனின் பராமரிப்பில் இருந்தார். இந்த நிலையில் மாணிக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். மாணிக்கத்தின் உடலை வீட்டின் அருகே தகனம் செய்தனர்....
குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
குளச்சல்,ஆக.5 : குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் இரணியல் சக் ஷம் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. ஒன்றிய பொதுச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய பொருளாளர் முருகன்,செயலாளர் ரமேஷ் கண்ணன், ரகு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பார்வையாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் கலந்து கொண்டார். கூட்டத்தில்...
சாத்தங்கோடு அரசு பள்ளியில் உலக நண்பர்கள் தின கொண்டாட்டம்
நித்திரவிளை, ஆக. 4: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து செயல்பட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆசிரியர் தலைவர் மற்றும் 2 மாணவர் தலைவர்களை நிர்ணயம் செய்து மகிழ் முற்றம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில்...