மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் நகை மாயம்
மார்த்தாண்டம், ஆக.4: மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு தேனாம்பாறை பிலாவல்கல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ததேயு மனைவி சஜீதா (38). இவர் பழுதடைந்த தனது செயினை சரி செய்வதற்காக ஒரு பர்ஸில் வைத்து பையில் எடுத்து சென்றுள்ளார். ஊரில் இருந்து ஆட்டோவில் மார்த்தாண்டம் வந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் செல்லும் தடம் எண் 311 பஸ்சில் ஏறி...
நாகர்கோவிலில் பைக் ஓட்டி சிக்கிய 12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
நாகர்கோவில், ஆக.3 : நாகர்கோவிலில் பைக் ஓட்டி சிக்கிய 12 சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகர பகுதிகளான வடசேரி, ஒழுகினசேரி பகுதிகளில் நேற்று முன் தினம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிகளில் 2 சிறார்கள் ஓட்டி வந்த மோட்டார்...
கடையாலில் டாஸ்மாக் கடை ஆக்ரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
அருமனை, ஆக.3 : அருமனை அருகே கடையால் சந்திப்பில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சற்று தொலைவில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் சாலைகள் குறுகியதாகவும், அதிகளவில் கடைகளும் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மதுக்கடையின் முன் பகுதியில் வலை மற்றும் வெல்டிங் பிரேம் அடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு...
திங்கள்சந்தையில் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
திங்கள்சந்தை, ஆக. 3: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நடந்த தவறுகளுக்கு நீதி கேட்டு, குமரி மாவட்ட லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லாயம் சுசீலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லங்கோடு நகர செயலாளர் துரைராஜ்...
குலசேகரம் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குலசேகரம், ஆக.1: குலசேகரம் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா தொடங்கியது .வரும் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கவுரங் கிருஷ்ணா தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் சங்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்வப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து...
குமரியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
நாகர்கோவில், ஆக. 1: குமரி மாவட்டத்தில் இன்று (1ம் தேதி) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 11வது வார்டுக்கு வடசேரி சிவகாமி அம்மாள் திருமண மண்டபம், கொல்லங்கோடு நகராட்சி வார்டு 1, 2, 3க்கு சிலுவைபுரம் ஜேசி சமூக நலக்கூடம், அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு எட்டாமடை ஆர்.சி. மண்டபம், திருவட்டார் பேரூராட்சிக்கு...
குழித்துறையில் ஓய்வூதியர் சங்க மாநாடு
மார்த்தாண்டம், ஆக. 1: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விளவங்கோடு வட்டக்கிளை 5வது மாநாடு குழித்துறையில் உள்ள மலையாள சமாஜ கூட்டரங்கில் நடந்தது. மாநாட்டிற்கு வட்ட தலைவர் நாராயண பிள்ளை தலைமை வகித்தார். செல்வமணி வரவேற்றார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி வட்ட தலைவராக சுகுமாரன், துணைத்தலைவர்களாக நாராயண பிள்ளை, ராமகிருஷ்ணன்...
அருவிக்கரையில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை தொடங்கி வைத்தார்
குலசேகரம், ஆக.1: அருவிக்கரை ஊராட்சி கோழிவிளையில் உள்ள துணை சுகாதார நிலையம் இடவசதி இல்லாத சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனையடுத்து இந்த துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு ரூ.45 லட்சம்...
குளச்சல் அருகே மீனவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
குளச்சல், ஆக. 1: குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் பிஜோஷியாம் (25). மீனவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனிஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிஜோஷியாம் அங்குள்ள ஆலயம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தனிஷ், சீலன்...