புதிய பாரத எழுத்தறிவு திட்ட 2ம் கட்டத் தேர்வுகள் டிச.14ல் நடக்கிறது
நாகர்கோவில், நவ.26 : புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 2ம் கட்ட தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது.தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதோருக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2025-26ம் ஆண்டு செயல்பாடுகளின் இரண்டாம் கட்டமாக, கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு குறித்த...
நவ.28ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில், நவ.26: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும்...
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்ரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம் தீக்குளிக்க போவதாக வியாபாரி மிரட்டியதால் பரபரப்பு
கன்னியாகுமரி, நவ. 26: கன்னியாகுமரி கடற்கரை சாலையின் இருபுறமும் காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை நடைபாதையை ஆக்ரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்....
சிஎன்ஆர் இல்ல திருமண விழா
நாகர்கோவில், நவ. 22: அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுண் பகுதியை சேர்ந்த மறைந்த டாக்டர் சி.என்.ராஜதுரை மற்றும் பிந்து சி.என்.ராஜதுரை மகள் டாக்டர் ரிஷாவுக்கும், நாகர்கோவில் முன்னாள் எம்பி எம்சி பாலன் பேரனும் டாக்டர்கள் சேகர், அஜிதா சேகரின் மகனுமான டாக்டர் ரோஷனுக்கும், நாளை (23ம் தேதி) காலை தேரேகால்புதூர் கங்கா கிராண்ட்யூர் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது....
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.12 லட்சத்தில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில், நவ. 22: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட ராணித்தோட்டம் வடக்கு தெரு, 7வது குறுக்கு தெருவில் ரூ.3.90 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி மற்றும் 46வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி பிச்சைகால...
மண்டல அளவிலான செஸ் போட்டி புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு வெள்ளிபதக்கம்
நாகர்கோவில், நவ. 22: கோவை மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், மண்டலங்களுக்கு இடையேயான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 19வது மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்ட நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை 3ம் ஆண்டு மாணவி ரியா சானோன்...
மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா
நாகர்கோவில்,நவ.21: நாகர்கோவில் மாவட்ட மைய நூலகத்தில், 58 வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. நிறைவு விழா நிகழ்ச்சியில் மூன்றாம் நிலை நூலகர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நூலக அலுவலர்(பொ) மேரி தலைமை வகித்தார். நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை...
சுமைதூக்கும் தொழிலாளி தவறி விழுந்து பலி
நாகர்கோவில், நவ. 21: நாகர்கோவில் போலீஸ் ஸ்டேசன் ரோடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (57) சுமைதூக்கும் பணியாளர். இவர் சம்பவத்தன்று அழகர்கோணம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் மாட்டு தீவனம் இறக்க சென்றார். தலையில் மாட்டு தீவன மூடையை எடுத்துக்கொண்டு செல்லும்போது, கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது....
புத்தளத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
நாகர்கோவில், நவ.21: புத்தளம் எல்.எம்.பி.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (22.11.2025) நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில்...