ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கேட்டு மீனவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூலை 29: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரி கடல் பகுதியில் கடற்கரையில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 27 ஆயிரம் சதுர கி.மீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறுகள் அமைக்க சர்வதேச அழைப்பாணை...
ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச கதை சொல்லல் மாநாடு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூலை 28: தென்னிந்தியாவில் முதல் முறையாக நாகர்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் சர்வதேச கதை சொல்லல் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டிற்கு பள்ளி தலைவர் டாக்டர் அருள் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் டாக்டர் அருள்ஜோதி, பள்ளி இயக்குனர்கள் சாந்தி, சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உளுந்து விதை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்
நாகர்கோவில், ஜூலை 28: அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வடக்கு தாமரைகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை ஊட்டுச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத்தொகுப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட வருவாய் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன், விவசாயிகள் கடோரப்பா, செல்லையா ஆகியோருக்கு முழு மானியமாக வம்பன் 8 ரக...
குலசேகரத்தில் பட்டப்பகலில் டீ கடை முன்பு நிறுத்திய ஸ்கூட்டர் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலை
குலசேகரம், ஜூலை 28: குலசேகரம், கைதறக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (52). கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் குலசேகரம், மாமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரின்...
தி இந்தியன் வேளாண்மை கல்லூரியில் 9 வது ஆண்டு விழா
நாகர்கோவில்,ஜூலை 25: ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மைக் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நடிகர் அதிர்ச்சி அருண் கலந்து கொண்டார். கல்லூரி தலைவர் முனைவர் எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார். மாணவர் மன்ற...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து லெனினிஸ்ட் கையெழுத்து இயக்கம்
குளச்சல், ஜூலை 25: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீனவர் கிராமங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் ஏ.ஐ.சி.சி.டி.யு....
ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 4 பவுன் நகை மாயம்
தக்கலை,ஜூலை 25: ஓடும் பஸ்சில் மூதாட்டியின் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தக்கலை அருகே வில்லுக்குறி பண்டாரக்காடை சேர்ந்தவர் தங்கம் (65). இவர் வில்லுக்குறியில் இருந்து தக்கலைக்கு தடம் எண் 7 சி பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .தக்கலை பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கி பார்த்த போது கழுத்தில்...
திருவட்டாரில் காங்கிரசில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
திருவட்டார்,ஜூலை 24: திருவட்டார் அருகே பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 25 பேர் விஜய் வசந்த் எம்பி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருவட்டார் நகர காங்கிரஸ் சார்பில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா பாரதப்பள்ளி அருகே நடந்தது. உடற்பயிற்சியாளர் மெர்ஜின் சிங் தலைமை வகித்தார். திருவட்டார் கிழக்கு வட்டார...
மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் குண்டு குழிகளை சீரமைத்த போக்குவரத்து போலீசார்
மார்த்தாண்டம், ஜூலை 24: மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் குண்டு குழிகளை டிராபிக் போலீசார் சீரமைத்தனர். மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையில் குண்டு குழிகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாகனங்கள் விதிகளை கடைபிடிக்காமல் வலது பக்கமாக ஏறி செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது....