கழுவன்திட்டையில் உலக கைம்பெண்கள் தின சிறப்பு மாநாடு பிஷப் பங்கேற்பு
திருவட்டார்,ஜூலை 2: உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு மாநாடு கழுவன்திட்டையில் நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட சமூக பணி மையமான மிட்ஸ் நிறுவனம் சார்பில் இந்த மாநாடு நடந்தது. நிகழ்ச்சியை மிட்ஸ் இயக்குநர் அருட்தந்தை ஜெரோம் துவக்கி வைத்தார். கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்மல் மேரி, களப்பணியாளர் ஆனிலெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்த்தாண்டம் மறை...
இரணியல் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
திங்கள்சந்தை, ஜூலை 1: இரணியல் அருகே ஞாறோடை சேர்ந்தவர் கணபதி (70). இவரது மனைவி சியாமளா (65). கடந்த 22ம் தேதி கணபதி தனது உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் 2 பேரும் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். பள்ளம்பாலத்தில் பைக் வந்தபோது பின் டயர் திடீரென பஞ்சரானதாக தெரிகிறது. இதனால்...
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெய சுதர்ஷன் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
குலசேகரம்,ஜூலை 1: குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயசுதர்ஷன் தக்கலையில் உள்ள அண்ணா,எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவட்டாரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை, குலசேகரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட துணை செயலாளர் சலாம்,...
மார்த்தாண்டத்தில் விதிமுறைகளை மீறிய 2 லாரிகள் பறிமுதல்
மார்த்தாண்டம், ஜூலை 1: மார்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனிமவளம் ஏற்றி செல்லும் கனரக லாரிகள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீஸ்...
குலசேகரம் அருகே பெண் மாயம்
குலசேகரம், ஜூன் 30: குலசேகரம் அருகே மண்டலாச்சிக் கோணம் பகுதியை சேர்ந்தவர் அஜின் (37). டிரைவர். இவரது மனைவி சோனியா (32). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 26ம் தேதி வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற சோனியா பின்னர் வீடு...
குளச்சலில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்
குளச்சல்,ஜூன் 30: குளச்சல் நகராட்சி பகுதியில் 81 மற்றும் 82-ம் வாக்குச்சாவடி அ.தி.மு.க. முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடைப்பெற்றது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா முன்னிலை வகித்தார். 2 வாக்குச்சாவடிகளிலும் தலா 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன்,...
களியக்காவிளையில் இறைச்சி கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது
மார்த்தாண்டம், ஜூன் 30: களியக்காவிளை அருகே கைதாகுழி பகுதியை சேர்ந்தவர் பைசல்கான் (32). களியக்காவிளை மார்க்கெட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கோழிவிளையை சேர்ந்த பிரபல ரவுடியான ராமச்சந்திரன் (32) என்பவருக்கும் கடையில் மேற்கூரை அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பைசல்கான் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது...
திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்
தக்கலை ஜூன் 28: திருவிதாங்கோடு முஸ்லிம் கலை கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குழு சார்பாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருதரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் எட்வின் ஷீலா முன்னிலை வகித்தார். போதை பொருள்...
கொல்லங்கோட்டில் மக்கள் சந்திப்பு நடைபயணம்
நித்திரவிளை, ஜூன் 28: கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங்கோடு நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைத்திட கேட்டும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் நடத்தும் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டின் முன்னோடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்...